ரூ.8 கோடி வைர கிரீடத்துடன் இளையராஜா.. அம்மன் கோயிலுக்கு சிறப்பு காணிக்கை!
Ilaiyarajaa: இளையராஜா, தனது சினிமா பயணத்தின் 50 ஆண்டுகளை எட்டியதையொட்டி, இளையராஜா கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை தேவிக்கும் வீரபத்ர சுவாமிக்கும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாளைக் காணிக்கையாக செலுத்தினார்.

கர்நாடகா, செப்டம்பர் 12, 2025: தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான இளையராஜா, சுமார் 1500 -க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து சாதனை படைத்துள்ளார். அவரை கௌரவிக்கும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு விருதுகளை வழங்கியுள்ளன. இந்த நிலையில், தனது சினிமா பயணம் அரை நூற்றாண்டை எட்டியதை ஒட்டி, கொல்லூர் மூகாம்பிகை தேவிக்கும் வீரபத்ர சுவாமிக்கும் சுமார் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாளைக் காணிக்கையாக செலுத்தினார். இளையராஜாவின் இந்த காணிக்கை பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையராஜா எனும் இசை ஜாம்பவான்:
இளையராஜா என்ற பெயர் தமிழ் சினிமாவின் ஓர் அங்கமாகக் கருதப்படுகிறது. சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இளையராஜாவின் இசையை கேட்டு வளர்ந்துள்ளனர். இன்றளவும் அவரது பாடல்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. சமீபத்தில் இளையராஜா லண்டனில் இசை நிகழ்ச்சி நடத்தி சாதனை படைத்தார்.
மேலும் படிக்க: மார்ஷல் படத்தில் கார்த்திக்கு வில்லனாகும் பிரபல நடிகர்.. அட இவரா?
இசையையும் இளையராஜாவையும் பிரிக்க முடியாது என்பதற்கான சான்றாக, இளையராஜாவின் பொன்விழா கொண்டாட்ட விழா தமிழக அரசு தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விழா 2025 செப்டம்பர் 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில், இளையராஜாவின் சிம்பொனி இசை நிகழ்ச்சியும் இடம்பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மூகாம்பிகை கோயிலுக்கு ரூ.8 கோடி மதிப்பிலான வைர கிரீடம்:
#Maestro #ILAIYARAAJA donates Diamond Crowns and Golden Sword to #Karnataka State #Kollur #Mookambika #Temple pic.twitter.com/3Ze0WR8iAU
— Pannaipuram_Official (@Pannaipuram_Off) September 10, 2025
இப்படியான சூழலில், தனது சினிமா பயணத்தின் 50 ஆண்டுகளை எட்டியதையொட்டி, இளையராஜா கர்நாடக மாநிலம் கொல்லூரில் உள்ள மூகாம்பிகை தேவிக்கும் வீரபத்ர சுவாமிக்கும் 8 கோடி ரூபாய் மதிப்புள்ள வைரக் கிரீடம், வைர மாலை மற்றும் தங்க வாளைக் காணிக்கையாக செலுத்தினார். இளையராஜாவின் ஜனனி ஜனனி பாடல் மூகாம்பிகை தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட மிகப் பிரபலமான பாடலாகும். அந்தப் பாடலை இளையராஜா மிகவும் உருக்கமாக பாடியுள்ளார். இன்றளவும் அந்தப் பாடலைக் கேட்கும் போது பக்தர்களுக்கு புத்துணர்ச்சி கிடைப்பது உண்மை.
மேலும் படிக்க: பிரமாண்ட இயக்குநர் சங்கருக்கு இப்போ இருக்கும் இயக்குநர்கள் யாரை பிடிக்கு? அவரே சொன்ன லிஸ்ட்
மூகாம்பிகை தேவியின் தீவிர பக்தரான இளையராஜா, கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்திற்குட்பட்ட கொல்லூரில் உள்ள கோயிலுக்கு வந்து வழிபட்டார். பின்னர், வைரக் கிரீடங்கள் மற்றும் தங்கக் காணிக்கைகளை செலுத்தினார். நகைகளை காணிக்கையாக செலுத்தும் முன், கோயில் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர்களுடன் கோவிலைச் சுற்றி ஊர்வலம் மேற்கொண்டார். பின்னர், 8 கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடையை செலுத்திய இளையராஜாவுக்கு, கோயில் தரப்பில் சிறப்பான பாராட்டு தெரிவிக்கப்பட்டது.