AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WPL 2026 Final: பைனலில் ஸ்மிருதி – ஜார்ஜியா ஃபயர் பர்ஃபாமன்ஸ்.. 2வது முறையாக ஆர்சிபி சாம்பியன்!

RCB Women vs DC Women WPL 2026 Final: முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. 204 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

WPL 2026 Final: பைனலில் ஸ்மிருதி – ஜார்ஜியா ஃபயர் பர்ஃபாமன்ஸ்.. 2வது முறையாக ஆர்சிபி சாம்பியன்!
Rcb Wpl
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 05 Feb 2026 23:18 PM IST

2026 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL 2026) இறுதிப்போட்டியில் இன்று அதாவது 2026 பிப்ரவரி 5ம் தேதி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் வதோதரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) டெல்லி அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். இதன் அடிப்படையில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. 204 ரன்கள் என்ற இலக்கை துரத்திய பெங்களூரு அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ALSO READ: சாம்பியன் பட்டம் யாருக்கு? களத்தில் பெங்களூரு – டெல்லி.. ஹெட் டூ ஹெட் விவரம்!

203 ரன்கள் குவித்த டெல்லி கேபிடல்ஸ்:

வதோதராவில் உள்ள பி.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், ஆர்.சி.பி. டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது. டெல்லி அணிக்காக கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் அதிகபட்சமாக 37 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். லாரா வால்வார்ட்டும் 44 ரன்கள் எடுத்தார். டெத் ஓவர்களில் சினெல் ஹென்றி வெறும் 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து டெல்லி அணியை 200 ரன்களைக் கடக்க உதவி செய்தார். இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் இறுதிப்போட்டி வரலாற்றில் 200 ரன்கள் எடுத்த முதல் அணி என்ற சாதனையை டெல்லி கேபிடல்ஸ் அணி படைத்தது.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக சயலி, அருந்ததி ரெட்டி மற்றும் நடின் டி கிளார்க் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.

அதிரடி தொடக்கம்:


204 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இரண்டாவது ஓவரிலேயே ஒரு விக்கெட்டை இழந்தது. இருப்பினும், ஸ்மிருதி மந்தனாவுடன் இணைந்த ஜார்ஜியா வால் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு தண்ணீர் காட்ட தொடங்கினர். இருவரும் இணைந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதத்தை கடந்தனர். ஸ்மிருதி மந்தனா வெறும் 23 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர்களுடன் தனது அரைசதத்தை எட்டினார். 2வது டிக்கெட்டுக்கு இழப்பிற்கு ஆர்சிபி அணி 165 ரன்கள் எடுத்திருந்தது. 54 பந்துகளில் 79 ரன்கள் எடுத்திருந்த ஜார்ஜியா வோல் வெளியேற, ரிச்சா கோஷூம் 6 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அப்போது, ஆர்சிபி அணியின் வெற்றிக்கு 14 பந்துகளில் 23 ரன்கள் தேவையாக இருந்தது. 18வது ஓவரின் கடைசி பந்தில் ஸ்மிருதி மந்தனா பவுண்டரி அடித்து நம்பிக்கை கொடுத்தார்.

ALSO READ: காத்திருக்கும் சாதனைகள்.. RCB vs DC இறுதிப் போட்டியில் செய்து காட்டுவாரா ஸ்மிருதி மந்தனா!

தொடர்ந்து, பெங்களூரு அணிக்கு வெற்றியை தேடி தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஸ்மிருதி மந்தனா, 87 ரன்களில் அவுட்டானர். தொடர்ந்து, உள்ளே வந்த ராதா யாதவ் அடுத்தடுத்து 2 பவுண்டர்களை பறக்கவிட்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார்.

Follow Us