CWG 2026: இந்தியாவின் அதிவேக மனிதன்.. காமன்வெல்த்தில் தகுதி சுற்றுடன் வெளியேறிய சோகம்!
Gurindervir Singh: 25 வயதான குரிந்தர்வீர், ஹீட் 4-ல் 10.39 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து, 10.13 வினாடிகளில் இலக்கைக் கடந்து 2ம் இடத்தை பிடித்தார். அதேநேரத்தில், ஜமைக்காவின் ரோகன் வாட்சன் முதல் இடம் பிடித்து அசத்தினார். குரிந்தர்வீர் மற்ற பந்தய வீரர்களை விட முன்னதாகவே பந்தயத்தை முடித்தபோதிலும், அரையிறுதிப் போட்டியில் இடத்தைப் பிடிக்க அவரது நேரம் போதுமானதாக இல்லை.
2026 காமன்வெல்த் விளையாட்டு (CommonWealth Games 2026) போட்டிகளின் தடகளப் போட்டியின் தொடக்க நாளான இன்று அதாவது 2026 ஜூலை 27ம் தேதி, ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனையாளரான குரிந்தர்வீர் சிங் தகுதிச் சுற்றைத் தாண்டத் தவறியதால், இந்தியா பதக்கம் (Medals) வெல்லும் வாய்ப்பு மிஸ் ஆனது. 11 தகுதிச் சுற்றுகளில், இந்திய ஓட்டப்பந்தய வீரரான குரிந்தர்வீர் சிங் 73 வீரர்களில் 28வது இடத்தைப் பிடித்தார். இந்தநிலையில், 73 வீரர்களில் 17 பேர் மட்டுமே அடுத்த சுற்றான அரையிறுதிக்கு முன்னேறினர். தகுதிபெறத் தேவையான 10.24 வினாடிகளை விட குரிந்தர்வீர் 0.15 வினாடிகள் பின்தங்கினார். இதன்மூலம் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை சில நொடிகளில் தவறவிட்டார்.
ALSO READ: 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு.. தங்கம் வென்ற இஷா சிங்.. வெண்கலத்துடன் முடித்த மனு பாக்கர்!




முதல் காமன்வெல்த்தில் ஏமாற்றம்:
Indian Fastest Man Gurindervir Singh was not able to Qualify for SF of 100m
– Clocked disappointing 10.39s in Men’s 100m & finished 28th place Overall 😢 pic.twitter.com/Is380unErA
— The Khel India (@TheKhelIndia) July 27, 2026
தனது முதல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற 25 வயதான குரிந்தர்வீர், ஹீட் 4-ல் 10.39 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்து, 10.13 வினாடிகளில் இலக்கைக் கடந்து 2ம் இடத்தை பிடித்தார். அதேநேரத்தில், ஜமைக்காவின் ரோகன் வாட்சன் முதல் இடம் பிடித்து அசத்தினார். குரிந்தர்வீர் மற்ற பந்தய வீரர்களை விட முன்னதாகவே பந்தயத்தை முடித்தபோதிலும், அரையிறுதிப் போட்டியில் இடத்தைப் பிடிக்க அவரது நேரம் போதுமானதாக இல்லை. ஐந்தாவது பாதையில் ஓட்டத்தை தொடங்கிய குரிந்தர்வீர், பந்தயத்தின் ஆரம்பத்தில் சிறப்பாகச் செயல்பட்டு வாட்சனுடன் சமமாம ஓடினார். ஆனால், ஜமைக்கா வீரரான வாட்சன், இறுதி மீட்டர்களில் வேகத்தை அதிகரித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
ALSO READ: கோவில்பட்டி முத்துபாண்டி வெள்ளி வென்றார்.. காமன்வெல்த் போட்டியில் சாதித்த தமிழர்!
கடந்த 2026 மே மாதம், இந்த பஞ்சாப் ஓட்டப்பந்தய வீரர் குரிந்தர்வீர் ராஞ்சியில் நடந்த ஃபெடரேஷன் கோப்பையில், 10.09 வினாடிகளில் ஒரு பிரமிக்க வைக்கும் தேசிய சாதனையைப் படைத்து, 10.10 வினாடித் தடையைத் தாண்டிய முதல் இந்திய ஆண் என்ற பெருமையைப் பெற்று இந்திய ஓட்டப்பந்தய வரலாற்றை மாற்றி எழுதினார். அவரது சாதனைப் பந்தயத்தில், குரிந்தர்வீர் சிங் முதலில் அரையிறுதியில் 10.17 வினாடிகளிலிருந்த தேசிய சாதனையை முறியடித்து, அனிமேஷ் குஜூரின் முந்தைய சாதனையான 10.18 வினாடிகளை முறியடித்தார். பின்னர் இறுதிப் போட்டியில் அதை மேலும் மேம்படுத்தி 10.09 வினாடிகளாக மாற்றினார். இந்தச் செயல்பாடு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வெல்வார் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது, ஆனால் அவரது முதல் போட்டியே ஏமாற்றமளித்தது.