AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Team India: ஆல்ரவுண்டர் இல்லாமல் தவிக்கும் இந்திய அணி.. ஹர்திக் பாண்ட்யா காயம் குணமடைந்ததா?

Hardik Pandya Injury Update: 2026 ஆகஸ்ட் மாதத் தொடரில் ஹர்திக் பாண்ட்யா முழு உடற்தகுதி பெற்றாலும் இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடரிலோ அல்லது வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலோ ஹர்திக் பாண்ட்யா இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது.

Team India: ஆல்ரவுண்டர் இல்லாமல் தவிக்கும் இந்திய அணி.. ஹர்திக் பாண்ட்யா காயம் குணமடைந்ததா?
ஹர்திக் பாண்ட்யாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 Jul 2026 19:39 PM IST

இந்திய அணியின் (Indian Cricket team) நட்சத்திர ஆல்-ரவுண்டரான ஹர்திக் பாண்ட்யா, காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். இந்தக் காயத்தின் காரணமாக, அயர்லாந்து, இங்கிலாந்து மற்றும் ஜிம்பாப்வே சுற்றுப்பயணங்களை ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) தவறவிட நேரிட்டது. தற்போது காயத்திலிருந்து மீள்வதற்காக பெங்களூருவில் இருக்கும் ஹர்திக், விரைவில் குணமடைந்து மீண்டும் களத்தில் இறங்கத் தயாராகிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தகவல்களின்படி, ஹர்திக் பாண்ட்யா வருகின்ற 2026 ஆகஸ்ட் மாதம் முதல் இந்திய அணிக்காக களமிறங்கலாம்.

ALSO READ: சென்னைக்கு வரும் ஹர்திக்.. மும்பைக்கு யார்? சிஎஸ்கே – மும்பை இடையே பரிமாற்றமா?

காயத்தால் அவதிப்படும் ஹர்திக் பாண்ட்யா:

2026 ஐபிஎல் சீசனிலிருந்து ஹர்திக் பாண்ட்யா காயங்களால் அவதிப்பட்டு வருகிறார். ஆரம்பத்தில், முதுகு காயம் காரணமாக அவர் சில போட்டிகளில் விளையாடவில்லை. காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்பிய பிறகு, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது ஏற்பட்ட எதிர்பாராதவிதமாக காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா அணியை விட்டு வெளியேற நேரிட்டது.

தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த ஹர்திக் பாண்ட்யா, பெங்களூருவில் உள்ள என்.சி.ஏ. மையத்திற்கு சென்றார். அங்கு அவர் மருத்துவ நிபுணர்கள் மற்றும் ஒரு பி.சி.ஓ.வின் மேற்பார்வையில் சிகிச்சை பெற்றார். தற்போது ஹர்திக் பாண்ட்யா அனைத்து உடற்தகுதி சோதனைகளிலும் தேர்ச்சி பெற்று, 2026 ஆகஸ்ட் மாதம் முதல் தேர்வுக்குத் தயாராக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன

2026 ஆகஸ்ட் மாதத் தொடரில் ஹர்திக் பாண்ட்யா முழு உடற்தகுதி பெற்றாலும் இலங்கைக்கு எதிரான வரவிருக்கும் டெஸ்ட் தொடரிலோ அல்லது வரவிருக்கும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலோ அவர் இடம்பெறுவதற்கான வாய்ப்பு குறைவு என்றே கூறப்படுகிறது. இதைக் கருத்தில் கொண்டு, 2026 செப்டம்பர் அல்லது அக்டோபரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் ஹர்திக் பாண்ட்யா விளையாடுவது நிச்சயம்.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இடையே 2026 செப்டம்பர் 27 முதல் 2026 அக்டோபர் 3 வரை மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெறும். இதைத் தொடர்ந்து, 2026 அக்டோபர் 6 முதல் 17 வரை ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெறும். இந்தப் போட்டிகளிலும் ஹர்திக் பாண்ட்யா மீண்டும் இந்திய அணிக்காகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ: எப்படி விளையாட வேண்டும் என எனக்கு யாரும் சொல்ல தேவையில்லை.. சஞ்சு சாம்சன் பதிலால் அதிர்ச்சி!

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாடுவாரா ஹர்திக்..?

வருகின்ற 2027ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் ஒருநாள் உலகக் கோப்பை நடைபெற உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், ஹர்திக் பாண்ட்யா போன்ற அனுபவமிக்க ஒரு ஆல்-ரவுண்டரின் சேவை இந்தியாவிற்கு மிகவும் முக்கியமானது. ஹர்திக் பாண்ட்யா அணியில் இருந்தால், பேட்டிங் வரிசைக்கு மிகப்பெரிய பலத்தை சேர்ப்பது மட்டுமல்லாமல், வேகப்பந்து வீச்சுக்கு ஒரு மாற்றாகவும் இருப்பார். அதனால்தான், இந்தியா உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமானால், ஹர்திக் பாண்ட்யா முழு உடற்தகுதியுடன் இருப்பது அவசியம்.

Follow Us