Team India: தோல்வி எதிரொலி! கவுதம் காம்பீர் மீது நடவடிக்கை? கூட்டத்தை கூட்டும் பிசிசிஐ!
BCCI Review Meeting: பிசிசிஐ-யின் மறுஆய்வுக் கூட்டத்தின் போது, பயிற்சி ஊழியர்கள் சிலர் மீதும் நடவடிக்கையை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. அதன்படி, ரியான் டென் டோஷ்கேட்டே தன்னை நீக்குமாறு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோரிக்கை விடுத்துள்ளதாக சமீபத்திய தகவல் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) சமீபத்திய செயல்பாடுகளை பிசிசிஐ உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அயர்லாந்து அணி கூட இந்திய அணியை 0-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்தது. அதனைத் தொடர்ந்து, இங்கிலாந்து அணி டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் இந்திய அணியை முழுமையாக வீழ்த்தியது. இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் இந்திய அணி 10 போட்டிகளில் விளையாடி, ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றது. தற்போது, இந்தச் செயல்பாடு குறித்து பிசிசிஐ (BCCI) விரைவில் ஒரு ஆய்வுக் கூட்டத்தை நடத்தக்கூடும் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ALSO READ: 3வது டி20யிலும் மாற்றங்கள் இருக்குமா..? உடைத்து பேசிய ஷ்ரேயாஸ் ஐயர்!
இந்திய அணியை மறுஆய்வு செய்யும் பிசிசிஐ:
கிரிக்பஸ் தகவலின்படி, பிசிசிஐ ஆய்வுக் கூட்டமானது வருகின்ற 2026 ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் நடைபெறலாம் என்று தெரிகிறது. இந்த ஆய்வுக் கூட்டத்தில் குறிப்பாக அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 தொடர்களில் தோல்வி குறித்து கவனம் செலுத்தப்படும் என்று பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார். இருப்பினும், கூட்டத்தின் தேதி இன்னும் வெளியிடப்படவில்லை.




ஷ்ரேயாஸ் ஐயர் அயர்லாந்து சுற்றுப்பயணத்தின் மூலம் தனது கேப்டன்சி வாழ்க்கையைத் தொடங்கினார். வரலாற்றில் முதன்முறையாக, அயர்லாந்து இந்திய அணிக்கு எதிராக ஒரு தொடரை வென்றது. இந்திய அணி நிர்வாகம் ஒரு இளம் அணியை உருவாக்கும் தனது நோக்கத்தைத் தெளிவாகக் கூறியிருந்தாலும், இங்கிலாந்தும் டி20 தொடரில் இந்தியாவை 0-4 என்ற கணக்கில் தோற்கடித்தது. சுப்மன் கில் தலைமையிலான ஒருநாள் அணியும் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது.
ALSO READ: இலங்கை டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வில் தாமதம் ஏன்? பிசிசிஐ விளக்கம்!
பயிற்சி ஊழியர்களை கவனிக்கும் பிசிசிஐ:
பிசிசிஐ-யின் மறுஆய்வுக் கூட்டத்தின் போது, பயிற்சி ஊழியர்கள் சிலர் மீதும் நடவடிக்கையை எதிர்கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. அதன்படி, ரியான் டென் டோஷ்கேட்டே தன்னை நீக்குமாறு பிசிசிஐ-யிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக சமீபத்திய தகவல் ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. அவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்துவிட்டது. இதன் காரணமாக, அவருக்குப் புதிய ஒப்பந்தம் கிடைக்க வாய்ப்பில்லை. இதற்கிடையில், இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது இந்திய அணி மோசமாக பீல்டிங் செய்தது. எனவே, பீல்டிங் பயிற்சியாளர் டி. திலீப்பும் பிசிசிஐ-யின் இலக்காக இருக்கலாம்.