AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Rinku Singh Marriage: வெளியான ரிங்கு சிங் – பிரியா சரோஜ் திருமண தேதி.. எப்போது தெரியுமா?

Rinku Singh - MP Priya Saroj Marriage Date: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரைச் சேர்ந்த ரிங்கு, லக்னோவில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து, நடைபெறும் இந்தத் திருமணத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிங்கு சிங் கிரிக்கெட் உலகில் நன்கு அறியப்பட்டவர்.

Rinku Singh Marriage: வெளியான ரிங்கு சிங் – பிரியா சரோஜ் திருமண தேதி.. எப்போது தெரியுமா?
ரிங்கு சிங் - பிரியா சரோஜ்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Sep 2026 20:24 PM IST

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான (IND vs AFG) டி20 தொடர் நடைபெற்று வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் (Indian Cricket Team) நட்சத்திர பேட்ஸ்மேன் ரிங்கு சிங்கின் (Rinku Singh) திருமணத் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ரிங்கு சிங்கு, மச்சிலிஷாஹர் சமாஜ்வாடி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பிரியா சரோஜை வருகின்ற 2026 டிசம்பர் 4 ஆம் தேதி லக்னோவில் உள்ள ரமடா ஹோட்டலில் திருமணம் செய்துகொள்ள உள்ளார். இந்த ஜோடிக்கு முன்னதாக கடந்த 2026 ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த விழாவில் விளையாட்டு மற்றும் அரசியல் உலகைச் சேர்ந்த பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

ALSO READ: சொதப்பும் சஞ்சு.. சூர்யவன்ஷிக்கு வாய்ப்பா..? இந்திய பிளேயிங் லெவன் விவரம்!

லக்னோவில் முடிந்த நிச்சயதார்த்தம்:

உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரைச் சேர்ந்த ரிங்கு, லக்னோவில் நிச்சயதார்த்தம் செய்துகொண்டார். இதனை தொடர்ந்து, நடைபெறும் இந்தத் திருமணத்தில் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான விருந்தினர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ரிங்கு சிங் கிரிக்கெட் உலகில் நன்கு அறியப்பட்டவர். மறுபுறம், பிரியா அரசியலில் ஒரு முக்கியப் பிரமுகராகவும் இருந்து வருகிறார். எனவே, இந்தத் திருமணத்தில் இரு துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிங்குவின் தந்தை மரணத்தால் திருமணம் ஒத்திவைப்பு:

ரிங்கு சிங் மற்றும் பிரியாவுக்கு கடந்த 2025ம் ஆண்டு வாரணாசியில் உள்ள தாஜ்மஹாலை திருமணம் செய்ய முதலில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், 2026 பிப்ரவரி 27ம் தேதி காலமான ரிங்கு சிங்குவின் தந்தை கஞ்சந்த் சிங்கின் மறைவைத் தொடர்ந்து, திருமணத் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

ரிங்கு சிங் சமீபத்தில் துலீப் கோப்பையில் விளையாடினார். ரிங்கு சிங் அந்தப் போட்டியின் இரு இன்னிங்ஸ்களிலும் முறையே 60 மற்றும் 20 ரன்கள் எடுத்தார். மேலும், 2026 ஜூலை மாதம் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரிலும் ரிங்கு சிங் பங்கேற்றார். தற்போது டெல்லியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடைபெற்று வரும் டி20 தொடரில் ரிங்கு சிங் சேர்க்கப்படவில்லை.

ALSO READ: வந்தவுடன் மீண்டும் காயம்.. ஆப்கானிஸ்தான் தொடரில் விலகும் வருண் சக்கரவர்த்தி!

ரிங்கு சிங்கின் சர்வதேச வாழ்க்கை

இந்தியாவுக்காக டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் விளையாடும் ரிங்கு சிங், தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 2 ஒருநாள் போட்டிகளிலும் 48 டி20 சர்வதேசப் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். தற்போது, ​​ரிங்கு சிங் முதன்மையாக இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடுகிறார். ரிங்கு சிங் இதுவரை இந்திய அணிக்காக 2 ஒருநாள் போட்டிகளில் 55 ரன்கள் எடுத்தார். மீதமுள்ள 35 டி20 சர்வதேசப் போட்டிகளில், ரிங்கு சிங் 702 ரன்கள் எடுத்தார். இந்தக் காலகட்டத்தில் அவரது சராசரி 36.94 ஆகவும், ஸ்டிரைக் ரேட் 156.34 ஆகவும் இருந்தது. இந்த வடிவத்தில் ரிங்கு சிங் 3 அரைசதங்களை அடித்துள்ளார். இதில், அவரது அதிகபட்ச ஸ்கோர் 69* ஆகும்.

Follow Us