Asian Games 2026: ஜப்பான் செல்ல விசாவால் தாமதம்.. சிக்கி தவிக்கும் இந்திய தடகள வீரர்கள்..!
Indian Athletes Japan Visa Delays: விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள வீரர்களுக்கு, தட்பவெப்பநிலைக்குப் பழகுவதற்கான முகாமில் பங்கேற்கப் போதுமான நேரம் கிடைக்காது என்ற கவலைகள் எழுந்துள்ளன. சில வீரர்களால் முகாமில் கலந்துகொள்ள முடியாமல் போகலாம். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் போட்டிகள் வருகின்ற 2026 செப்டம்பர் 23ம் தேதி ஐச்சி-நகோயாவில் தொடங்குகின்றன.
2026 ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான (2026 Asian Games) கவுண்ட்டவுன் தொடங்கிவிட்டது. இதில், பங்கேற்பதற்காக 207 பேர் கொண்ட இந்திய அணியின் ஆயத்தப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. 2022-ல் செயல்பட்டதை விட இந்த 2026ம் ஆண்டு சிறப்பாகச் செயல்பட இந்தியா இலக்கு வைத்துள்ளது. இருப்பினும், போட்டி தொடங்குவதற்கு முன்பே இந்திய அணிக்கு ஒரு பெரிய சிக்கல் எழுந்துள்ளது. இந்தியாவின் மிக முக்கிய தடகள அணியை (Indian Athletes) சேர்ந்த 4-5 வீரர்களுக்கு ஜப்பானுக்கான விசாக்கள் இன்னும் கிடைக்கவில்லை. பிடிஐ அறிக்கையின்படி, டோக்கியோ அருகே உள்ள சுகுபா பல்கலைக்கழகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புதிய சூழலுக்குப் பழகுவதற்கான முகாமிற்காக சில இந்திய வீரர்கள் ஜப்பானிற்கு சென்றுள்ளனர். புதிய சூழலுக்கு அவர்கள் பழகுவதற்கு உதவும் வகையில் இந்த பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், சில வீரர்களின் விசாக்கள் இன்னும் அங்கீகரிக்கப்படாததால், அந்த வீரர்கள் ஜப்பான் செல்வதற்கு தாமதமாகிறது.
ALSO READ: இந்தியாவில் ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி.. பங்கேற்குமா பாகிஸ்தான்..?
விசா பிரச்சனைகளுக்கு காரணம் என்ன?
அதிகாரப்பூர்வ வட்டாரங்களின்படி, விசா மற்றும் டிக்கெட் போன்றவற்றை கையாளும் வெளிப்பணி நிறுவனமான வி.எஃப்.எஸ், விண்ணப்பதாரர்கள் தங்களது டிக்கெட்கள் வழங்கப்பட்ட அதே இடத்தில் விசாக்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. இது சில இந்திய விளையாட்டு வீரர்களின் விசா செயலாக்கத்தைத் தாமதப்படுத்துகிறது. இதற்கிடையில், இந்தப் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படும் என்று இந்திய தடகள கூட்டமைப்பு (ஏ.எஃப்.ஐ) தெரிவித்துள்ளது.




தடகளப் போட்டிகள் எப்போது தொடங்குகிறது..?
விசா பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ள வீரர்களுக்கு, தட்பவெப்பநிலைக்குப் பழகுவதற்கான முகாமில் பங்கேற்கப் போதுமான நேரம் கிடைக்காது என்ற கவலைகள் எழுந்துள்ளன. சில வீரர்களால் முகாமில் கலந்துகொள்ள முடியாமல் போகலாம். ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் தடகளப் போட்டிகள் வருகின்ற 2026 செப்டம்பர் 23ம் தேதி ஐச்சி-நகோயாவில் தொடங்குகின்றன. எனவே, இந்திய வீரர்களுக்கு விசா பிரச்சினைக்கு விரைவான தீர்வு காண்பது முக்கியமானதாக இருக்கும். தடகளத்திற்கு அடுத்தபடியாக, இந்தியாவின் இரண்டாவது பெரிய அணி ஹாக்கி ஆகும். இதில், 40 வீரர்கள் உள்ளனர். கிரிக்கெட்டில், ஐசிசி தரவரிசையின் அடிப்படையில் இந்தியா உட்பட 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியுள்ளன. இந்திய கிரிக்கெட் அணியின் முதல் போட்டி வருகின்ற 2026 செப்டம்பர் 28ம் தேதி நடைபெறுகிறது.
ALSO READ: இந்திய அணியினருக்கு 5 ஸ்டார் ஹோட்டல் இல்லை.. ஸ்ரிட்டாக சொன்ன பிசிசிஐ!
நகோயாவில் உள்ள இந்திய அணியின் மற்ற உறுப்பினர்களுடன் நேரடியாக இணைக்கப்படுவார்கள். மற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் வருகின்ற 2026 செப்டம்பர் 20 வரை சுகுபா பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுவார்கள். பின்னர், தடகளப் போட்டி தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, வருகின்ற 2026 செப்டம்பர் 21ம் தேதி டோக்கியோவிலிருந்து நகோயாவிற்குப் புறப்படுவார்கள்.