AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Hockey Game: இந்தியாவில் ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி.. பங்கேற்குமா பாகிஸ்தான்..?

Asian Mens Champions Trophy 2026: ஹாக்கி இந்தியா தகவலின்படி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், இன்று அதாவது 2026 செப்டம்பர் 14ம் தேதி மொஹாலியில் 'ஏ.எச்.எஃப் ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2026' போட்டிக்கான தேதிகளுக்கான அதிகாரப்பூர்வ அட்டவணையை அறிவித்தார்.

Hockey Game: இந்தியாவில் ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி.. பங்கேற்குமா பாகிஸ்தான்..?
இந்தியா - பாகிஸ்தான் ஹாக்கி போட்டி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 15 Sep 2026 08:00 AM IST

2026 ஆண்டுக்கான ‘ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கிப் போட்டி 2026’ (Asian Mens Champions Trophy) இந்தியாவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் போட்டியின் தேதிகளையும் அதிகாரப்பூர்வ அட்டவணையையும் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு 2026 செப்டம்பர் 14ம் தேதியான நேற்று அறிவித்தது. இந்தப் போட்டி முழுவதும் 2026 அக்டோபர் 27 முதல் 2026 நவம்பர் 5 வரை பஞ்சாபின் 2 முக்கிய நகரங்களில் நடைபெறும். இந்தப் போட்டியில் இந்திய அணியும், பாகிஸ்தானும் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பது, விளையாட்டு ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பாகிஸ்தான் அணி இந்தியாவிற்கு வருமா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாகவுள்ளது. கடந்த 2025 நவம்பர்-டிசம்பர் மாதங்களில், தமிழ்நாட்டில் நடைபெற்ற ‘ஜூனியர் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை’ போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி விலகியது.

ALSO READ: ஆசிய விளையாட்டில் இந்திய ஹாக்கி அணியின் ஜெர்சி நிறம் இதுவா..? ஹாக்கி இந்தியா ஓபன்!

ஹாக்கி போட்டிகள் எங்கு நடைபெறுகிறது..?

ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் மாபெரும் ஹாக்கி நிகழ்வு பஞ்சாபின் வரலாற்றுச் சிறப்புமிக்க மைதானங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் தொடக்க விழா மற்றும் அனைத்து லீக் ஸ்டேஜ் போட்டிகளும் ஜலந்தரில் நடைபெறும். அதே சமயம், தொடரின் மிக முக்கியமான மற்றும் விறுவிறுப்பான அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் மொஹாலியில் நடைபெறும். இந்தத் தொடரில், ஆசியக் கண்டத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், கொரியா மற்றும் மலேசியா ஆகிய 6 வலுவான அணிகள் பட்டத்திற்காக ஒன்றோடொன்று போட்டியிடும்.

ஹாக்கி இந்தியா தகவலின்படி, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், நேற்று அதாவது 2026 செப்டம்பர் 14ம் தேதி மொஹாலியில் ‘ஏ.எச்.எஃப் ஆடவர் ஆசிய சாம்பியன்ஸ் டிராபி 2026’ போட்டிக்கான தேதிகளை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த சிறப்பு நிகழ்வில், ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலாளர் போலா நாத் சிங், தலைமை இயக்குநர் கமாண்டர் ஆர். கே. ஸ்ரீவஸ்தவா, செயற்குழு உறுப்பினர் ஆர். பி. சிங் மற்றும் ஹாக்கி பஞ்சாப் தலைவர் நிதின் கோலி ஆகியோரும் உடனிருந்தனர்.

இதற்கிடையில், பாகிஸ்தான் அணியின் இந்திய சுற்றுப்பயணம் குறித்து பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், “இதுபோன்ற ஒரு பன்னாட்டுப் போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. தற்போதைய அரசியல் சூழ்நிலை காரணமாக, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்புத் தொடர் நடைபெறாமல் போகலாம். ஆனால், ஆசிய சாம்பியன்ஸ் டிராபி போன்ற சர்வதேச அரங்குகளில் இரு அணிகளும் ஒன்றையொன்று எதிர்த்து விளையாடுவதைக் காணலாம்” என்றார்.

ALSO READ: இது எங்களுக்கு முதல் படி.. இந்தியாவிற்கு எதிரான டி20 குறித்து ஜப்பான் கேப்டன் பெருமிதம்!

சர்வதேசப் போட்டியின் பாதுகாப்பையும் திட்டமிடலையும் உறுதி செய்யும் பொருட்டு, ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு ஓமன் மற்றும் வங்கதேசம் ஆகிய இரண்டு அணிகளை ‘ரிசர்வ் அணிகளாக’ வைத்துள்ளது. சரியான நேரத்தில் ஒரு அணி போட்டியிலிருந்து விலகினால், இந்த இரண்டு அணிகளில் ஒன்றுக்கு பிரதான போட்டியில் விளையாட வாய்ப்பு வழங்கப்படும்.

Follow Us