AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மோதல் – ஒருவர் மரணம் – பரபரப்பு தகவல்

Vinayagar Idol Procession Assault : சென்னை, ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் செப்டம்பர் 14, 2024 நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏறப்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சீனிவாசன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மோதல்  – ஒருவர் மரணம் – பரபரப்பு தகவல்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 15 Sep 2026 08:56 AM IST

சென்னை, செப்டம்பர் 15 : சென்னை, ராமாபுரம் வெங்கடேஸ்வரா நகரில் செப்டம்பர் 14, 2024 நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடைபெற்ற விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே தகராறு ஏறப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் தாக்கிக்கொண்டதாக கூறப்படும் நிலையில் தாக்குதலில் படுகாயமடைந்த சீனிவாசன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் குறித்து ராமாபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

சென்னையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் மோதலில் ஒருவர் மரணம்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 15, 2026 நேற்று சென்னை ராமாபுரத்தில் விநாயகர் சிலையை ஊர்வலமாக கொண்டு சென்றுள்ளனர். அப்போது ஊர்வலத்தை தங்கள் பகுதி முழுவதும் சுற்றி வரச்சொல்லி கேட்டு ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த நிலையில் வாக்குவாதம் முற்றி தகவல் இரு குழுவினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த சீனிவாசன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் செப்டம்பர் 15, 2026 இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் தற்போது ஆனந்த் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரங்களையும் காவல்துறையினர் விசாரித்து வருவதாக கூறப்படுகிறது. மகிழ்ச்சியாக கொண்டாடப்பட வேண்டிய விநாயகர் சதுர்த்தி விழாவில் இளைஞர் கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

இதே போல திண்டுக்கல் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை வைப்பதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்கிறார். திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை தாலுகா, ராமகிரி அடுத்த பொம்ம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பொம்மன். இவருக்கு 47 வயது ஆகிறது. விவசாயியான இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். அவர்களில் இரண்டு பேர் திண்டுக்கலில் உள்ள பொம்ம நாயக்கன் பட்டியில் வசித்து வருகின்றனர்.

செப்டம்பர் 13, 2026 அன்று, அவரின் சொந்த ஊரான பொம்ம நாயக்கன்பட்டியில் விநாயகர் சிலை வைப்பதில் அவருக்கும் அவரது ஊரை சேர்ந்த சிலருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை வைத்து குஜிலியம்பாறை காவல் நிலையத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதனை முடித்துக்கொண்டு பொம்மன், கருவாடு நாயக்கணூரில் உள்ள தனது 3வது மனைவி வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். ஆனால், பொம்மன் அவரது 3வது மனைவியின் வீட்டிற்கு செல்லவில்லை. அப்போதுதான் அவர், முஷ்டகிணத்துப்படி என்ற பகுதியில் உடலில் பல்வேறு இடங்களில் ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடப்பது குறித்து போலீசார் மற்றும் பொம்மனின் குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பொம்மனின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Follow Us