AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பேய் பிடித்ததாக கூறி மாணவியை கொடுமைப்படுத்திய சக மாணவிகள்.. ஷாக் சம்பவம்!

Girls Tortured Co Student In Kallakurichi | கள்ளக்குறிச்சியில் கல்லூரி மாணவியை அவரது அறையில் இருக்கும் சக மாணவிகள் பேய் பிடித்ததாக கூறி கொடுமை படுத்தியுள்ளனர். இந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பேய் பிடித்ததாக கூறி மாணவியை கொடுமைப்படுத்திய சக மாணவிகள்.. ஷாக் சம்பவம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 Sep 2026 09:02 AM IST

கள்ளக்குறிச்சி,  செப்டம்பர் 15 : கள்ளக்குறிச்சியில் (Kallakurichi) மகளிர் பொறியியல் கல்லூரி விடுதியில் பேய் பிடித்ததாக கூறி, மாணவியின் கையில் கற்பூரம் ஏற்றியும், துடைப்பத்தால் அடித்து சக தோழிகள் கொடுமைப்படுத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கல்லூரி மாணவி, சக தோழிகளால் கொடுமைபடுத்தப்பட்ட சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விடுதியில் வைத்து கொடுமைப்படுத்திய சக தோழிகள்

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் பகுதியில் உள்ள இதயா மகளிர் பொறியியல் கல்லூரியில், வாணாபுரம் பகுதியை சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் முதலாம் ஆண்டு சி.எஸ்.இ படித்து வருகிறார். அவர் அங்குள்ள விடுதியில் தங்கி படித்து வருகிறார். அவருடன் விடுதியில் மேலும் சில மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர்.

இதையும் படிங்க : மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறு.. டாஸ்மாக் கடை வாசலில் இளைஞரை வெட்டி சாய்த்த மர்ம நபர்கள்

பேய் பிடித்ததாக கூறி மாணவியை கொடுமை செய்த தோழிகள்

இந்த நிலையில் தான், வாணாபுரம் பகுதியை சேர்ந்த மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி, அந்த மாணவியுடன் தங்கியிருந்த சக மாணவிகள் அவரை கொடுமைப்படுத்தியுள்ளனர். அதாவது, அவர்கள் அனைவரும் இணைந்து மாணவிக்கு பேய் பிடித்ததாக கூறி அவரது கையில் கர்பூரம் ஏற்றியுள்ளனர். பிறகு அவர்கள் அந்த மாணவியை துடைப்பத்தால் அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

Follow Us