IND vs JAP: இது எங்களுக்கு முதல் படி.. இந்தியாவிற்கு எதிரான டி20 குறித்து ஜப்பான் கேப்டன் பெருமிதம்!
Japan Captain Kadowaki Fleming: இந்தியாவிற்கு எதிரான டி20 போட்டி குறித்துப் பேசிய ஜப்பான் (IND vs JAP) கேப்டன் கெண்டல் கடோவாகி-பிளெமிங், தனது அணி இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக மட்டும் களமிறங்கவில்லை, மாறாக தங்களின் திறமையை வெளிக்காட்டவே களமிறங்கும் என்று கூறினார்.
இந்தியாவும் (Indian Cricket Team) ஜப்பானும் வருகின்ற 2026 செப்டம்பர் 22ம் தேதி ஒரு வரலாற்று சிறப்புமிக்க, ஒரே ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடவுள்ளன. இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75வது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களின் தொடக்கமாக இந்தப் போட்டி அமையும். இந்தப் போட்டி குறித்துப் பேசிய ஜப்பான் (IND vs JAP) கேப்டன் கெண்டல் கடோவாகி-பிளெமிங், தனது அணி இந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக மட்டும் களமிறங்கவில்லை, மாறாக தங்களின் திறமையை வெளிக்காட்டவே களமிறங்கும் என்று கூறினார்.
ALSO READ: திரும்பிய சஞ்சு சாம்சன்.. பார்ம் அவுட்டில் அபிஷேக்.. இந்திய பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்?
ஜப்பான் கேப்டன் கடோவாகி-ஃபிளெமிங் விளக்கம்:
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய கடோவாகி-ஃபிளெமிங், “இது மிகவும் உற்சாகமானது. ஆப்கானிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகள் ஜப்பானுக்கு வருவது இங்குள்ள கிரிக்கெட்டுக்கு ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் என்று நான் நினைக்கிறேன். சில ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியா போன்ற நாடுகள் இங்கு வருவதற்காக ஏற்பாடு செய்ய முடியும் என்று யாராவது சொல்லி இருந்தால் நம்பியிருக்க மாட்டோம், நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டோம்,” என்றார்.
VIDEO | Japan captain Kendel Kadowaki-Fleming and teenaged all-rounder Charlie Hara-Hinze believe the country’s historic one-off T20 against India can be far more than a landmark occasion, with the September 22 fixture potentially providing a springboard for sustained growth of… pic.twitter.com/XbEWVXcMk4
— Press Trust of India (@PTI_News) September 11, 2026
தொடர்ந்து பேசிய ஜப்பான் கேப்டன் கடோவாகி-ஃபிளெமிங், “இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது எவ்வளவு உற்சாகமாக இருந்தாலும், நாங்கள் அந்த நிகழ்வைக் கொண்டாடுவதற்காக மட்டும் களமிறங்கவில்லை. ஒரு ஆண்கள் அணியாக எங்களால் என்ன செய்ய முடியும் என்பதைக் காட்டுவதற்காகவே நாங்கள் களமிறங்குகிறோம். வெளிப்படையாக, இந்தியாவைப் போன்ற ஒரு அணியில் வேகப்பந்துவீச்சு, பேட்டிங் மற்றும் சுழற்பந்துவீச்சு என ஒவ்வொரு துறையிலும் சிறந்த வீரர்கள் உள்ளனர். எனவே, உலகத் தரம் வாய்ந்த வீரர்களும், அந்த வடிவத்தில் உலகின் சிறந்த அணியும் விளையாடுவதைப் பார்ப்பது எங்களுக்கு ஒரு சிறந்த அனுபவமாக இருக்கும். முழு உறுப்பினர் நாடுகளுடன் விளையாடுவதற்கும் போட்டியிடுவதற்கும் இது ஒரு நீண்ட வரலாற்றின் முதல் படியாக அமையும் என நம்புகிறேன்” என்றார்.
டி20 போட்டிக்கான ஜப்பான் அணி:
கெண்டல் கடோவாக்கி-ஃப்ளெமிங் (கேப்டன்), சார்லி ஹின்ஸ், பெஞ்சமின் இடோ-டேவிஸ், கோஹெய் குபோடா, வதாரு மியாவுச்சி, ரியோ சகுரானோ-தாமஸ், அலெக்ஸ் ஷிராய்-பட்மோர், ஷோமா சுகாயா-ஸ்லேட்டர், டெக்லான் சுஸுகி, இப்ராஹிம் தகஹாஷி, மகோடோச் தகஹாஷிமா, கடோவாகி-ஃப்ளெமிங், ஜேக் குசுதா-நைரன் மற்றும் சுயோஷி தகாடா.


