AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs JAP: இந்தியாவும் ஜப்பானும் டி20 கிரிக்கெட்டில் முதல் முறை மோதல்.. அதுவும் இந்த சிறப்பு நாளிலா..?

India vs Japan T20I Match: இந்தியாவுக்கும் (Indian Cricket Team) ஜப்பானுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75வது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களின் தொடக்கமாக இந்தப் போட்டி அமையும். இந்தப் போட்டி, 2026 செப்டம்பர் 22 அன்று, டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

IND vs JAP: இந்தியாவும் ஜப்பானும் டி20 கிரிக்கெட்டில் முதல் முறை மோதல்.. அதுவும் இந்த சிறப்பு நாளிலா..?
இந்தியா - ஜப்பான் டி20 போட்டி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Sep 2026 18:44 PM IST

இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே ஒரு வரலாற்று சிறப்புமிக்க கிரிக்கெட் போட்டி (Cricket Match) நடைபெற உள்ளது. ஜப்பானுக்கு எதிரான போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் இன்று அதாவது 2026 செப்டம்பர் 4ம் தேதி அறிவித்தது. இந்தியாவுக்கும் (Indian Cricket Team) ஜப்பானுக்கும் இடையிலான தூதரக உறவுகளின் 75வது ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்களின் தொடக்கமாக இந்தப் போட்டி அமையும். இந்தப் போட்டி, 2026 செப்டம்பர் 22 அன்று, டோச்சிகி மாகாணத்தில் உள்ள சானோ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

இந்தப் போட்டி தொடர்பாக பிசிசிஐ வெளியிட்ட செய்திக்குறிப்பில், “இந்தியா-ஜப்பான் தூதரக உறவுகளின் 75வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், இரு நாடுகளின் ஆண்கள் அணிகள் ஒரு டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடும் என்பதை ஜப்பான் கிரிக்கெட் சங்கமும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ALSO READ: 2027 உலகக்கோப்பை: ரோகித் சர்மாவுக்கு வாய்ப்பு இல்லையா? பிசிசிஐ கூட்டத்தில் நடந்தது என்ன?

இருவருக்கும் இடையிலான முதல் போட்டி:


சர்வதேச அளவில் இந்தியாவும் ஜப்பானும் எந்த வடிவத்திலும் மோதுவது இதுவே முதல் முறையாகும். இது இரு நாட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொடுத்துள்ளது. ஒருபுறம், உலகின் தலைசிறந்த அணிகளில் ஒன்றான இந்திய அணியும், மறுபுறம், கிரிக்கெட்டில் இன்னும் தனக்கென ஒரு பெயரை நிலைநாட்டாத அணியான ஜப்பானும் மோதுகின்றன.

மேலும் பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில், “இந்தப் போட்டி ‘ஸ்போர்ட் 75’ முன்னெடுப்பின் முதல் படியாக அமையும். ஜப்பான் பிரதமர் சானே டகாயிச்சிக்கும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பில் எட்டப்பட்ட உடன்படிக்கையின் மூலம் இந்த முன்னெடுப்பு தொடங்கப்பட்டது . 2036ம் ஆண்டில் ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை நடத்த வேண்டும் என்ற இந்தியாவின் லட்சியத்தையும் கருத்தில் கொண்டு, விளையாட்டுத் துறையில் இந்தியாவுக்கும் ஜப்பானுக்கும் இடையே மக்கள் பரிமாற்றங்களையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.” என்று தெரிவித்திருந்தது.

ALSO READ: 100கிமீ ஓடி வந்து பவுலிங் செய்த கிரிக்கெட் வீரர்.. எதற்காக தெரியுமா?

போட்டியைப் பற்றி பிசிசிஐ செயலாளர் கூறியது என்ன..?

இந்தியா – ஜப்பான் இடையிலான போட்டி குறித்துப் பேசிய பிசிசிஐ செயலாளர் தேவாஜித் சைகியா, “ஜப்பானில் நடைபெறும் ஒரு சிறப்பு டி20 சர்வதேசப் போட்டிக்காக இந்திய மற்றும் ஜப்பானிய ஆண்கள் அணிகள் ஒன்றிணையும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில் ஒரு அங்கமாக இருப்பதில் வாரியம் பெருமகிழ்ச்சி அடைகிறது. இது கிரிக்கெட்டிற்கு ஒரு முக்கியமான தருணம். இது இந்திய அணியின் ஒரு புதிய இலக்கை நோக்கிய பயணத்தைக் குறிப்பதோடு, ஜப்பான் மற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ள பரந்த பார்வையாளர்களிடம் இந்த விளையாட்டைக் கொண்டு செல்ல ஒரு வாய்ப்பையும் வழங்குகிறது,” என்றார்.

Follow Us