ஆசிய கோப்பை : சஞ்சு சாம்சனுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா? வெளியான தகவல்
Sanju Samson Asian Cup Match Fee: பிசிசிஐ விகிதத்தின்படி, சர்வதேச போட்டிகளில் ஒரு இந்திய வீரர் டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடினால் அவருக்கு ரூ. 3 லட்சம் கிடைக்கும். ஒரு ஒருநாள் போட்டிக்கான ஊதியம் ரூ.6 லட்சமாகவும், டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் ரூ.15 லட்சமாகவும் உள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியில் சஞ்சு சாம்சன் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக மாறி வருகிறார். நாடு முழுவதும் உள்ள ரசிகர்களுக்கும் சஞ்சு ஒரு பெரும் நம்பிக்கையாக இருக்கிறார். குறிப்பாக சிஎஸ்கே அணியில் அவர் இடம் பிடித்ததற்கு பிறகு தமிழ்நாட்டளவிலும் அவருக்கு ஆதரவு பட்டாளம் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் ஆசியக் கோப்பையில் இந்திய அணிக்காக சஞ்சு சாம்சனுக்கு விளையாட வாய்ப்பு கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையில் அவருக்கு ஆசிய கோப்பையில் இடம் கிடைத்தால், சம்பளமாக எவ்வளவு கிடைக்கும் என்ற தகவல் தற்போது வைரலாகி வருகிறது.
ஆசிய கோப்பை போட்டியில் எவ்வளவு சம்பவளம் கிடைக்கும்?
குறிப்பாக ஆசியக் கோப்பை டி20 வடிவில் நடத்தப்பட்டால், பிசிசிஐ நிர்ணயித்துள்ள டி20 சர்வதேசப் போட்டி ஊதியம் அந்த வீரருக்குக் கிடைக்கும். தற்போதைய பிசிசிஐ சர்வதேசப் போட்டி ஊதிய விகிதத்தின்படி, ஒரு இந்திய வீரர் டி20 சர்வதேசப் போட்டியில் விளையாடினால் அவருக்கு ரூ. 3 லட்சம் கிடைக்கும். ஒருநாள் போட்டிக்கான ஊதியம் ரூ. 6 லட்சமாகவும், டெஸ்ட் போட்டிக்கான ஊதியம் ரூ. 15 லட்சமாகவும் உள்ளது. கடந்த 2022 ஆம் ஆண்டில், ஆண் மற்றும் பெண் வீரர்களுக்கு ஒரே மாதிரியான சர்வதேசப் போட்டி ஊதியத்தை பிசிசிஐ அறிவித்திருந்தது.
இதையும் படிக்க : Womens Champions Trophy: ஐசிசி கொடுத்த ட்விஸ்ட்! சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா!




இங்கு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்தக் கணக்கில் போட்டி ஊதியம் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளது. இதனுடன் பிசிசிஐயின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத் தொகையும் கூடுதலாகக் கிடைக்கும். கடந்த 2025-26 சீசனுக்கான பிசிசிஐயின் வருடாந்திர ஒப்பந்தத்தில் சஞ்சு சாம்சன் கிரேட் சி பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.
விளையாடினால் மட்டும்தான் சம்பளமா?
போட்டி ஊதியத்தைப் பொறுத்தவரை மற்றொரு முக்கிய வித்தியாசமும் உள்ளது. அணியின் குழுவில் இடம்பெற்றிருப்பதால் மட்டும் போட்டி ஊதியம் கிடைத்துவிடாது. பொதுவாக, போட்டியில் களமிறங்கி விளையாடும் வீரருக்கே போட்டி ஊதியம் வழங்கப்படும். எனவே, ஆசியக் கோப்பைக்கான இந்திய அணியில் சஞ்சு இடம்பெற்றாலும், பிளேயிங் லெவனில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது முக்கியமானதாக இருக்கும்.
இதையும் படிக்க : Pakistan Cricket Team: 3 ஆண்டுகளில் 6 பயிற்சியாளர்கள் மாற்றம்.. பரிதவிக்கும் பாகிஸ்தான் அணி!
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக அணியில் இடம்பிடிக்க சஞ்சு போட்டியிட வேண்டியிருக்கும். ஆனால், அவருக்கு வாய்ப்பு கிடைத்து அவர் சிறப்பாகச் செயல்பட்டால், தனிப்பட்ட சாதனைகளுடன் சேர்த்து அணியின் வெற்றியின் மூலம் கிடைக்கும் பிற வருமான பலன்களையும் அவர் பெற வாய்ப்புள்ளது.