AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Womens Champions Trophy: ஐசிசி கொடுத்த ட்விஸ்ட்! சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா!

India Host Women's CT 2027: பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இந்தத் தொடரில் பங்கேற்காது.  கடந்த 2026 ஜூலை 6 ஆம் தேதி வரையிலான காலக்கெடுவின்படி, ஐசிசி மகளிர் டி20 அணி தரவரிசையில் தங்களின் நிலையின் அடிப்படையில் இந்த 6 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர், ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெறும்.

Womens Champions Trophy: ஐசிசி கொடுத்த ட்விஸ்ட்! சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமையை பெற்ற இந்தியா!
மகளிர் சாம்பியன்ஸ் டிராபி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Sep 2026 21:24 PM IST

வருகின்ற 2027ம் ஆண்டுக்கான ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிராபியை (ICC Womens Champions Trophy) இந்தியா நடத்தும். இதை ஐசிசி (ICC) இன்று அதாவது 2026 செப்டம்பர் 2ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்தத் தொடரின் முதல் பதிப்பில் 6 அணிகள் விளையாடவுள்ளன. இத்தொடரானது வருகின்ற 2026 பிப்ரவரி 14 முதல் 28 வரை மும்பை மற்றும் வதோதராவில் நடைபெறும். மும்பையின் இந்திய கிரிக்கெட் கழகமும், வதோதரா சர்வதேச கிரிக்கெட் மைதானமும் இந்த முக்கியத் தொடரை நடத்தவுள்ளன. போட்டியை நடத்தும் இந்தியாவுடன், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் அணிகளும் பங்கேற்கின்றன.

ALSO READ: பறிபோன சாம்பியன்ஸ் டிராபியை நடத்தும் உரிமை.. பொன்னான வாய்ப்பை மிஸ் செய்த இலங்கை!

பாகிஸ்தான் மகளிர் அணி இந்தியாவில் விளையாடுமா?


பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி இந்தத் தொடரில் பங்கேற்காது.  கடந்த 2026 ஜூலை 6 ஆம் தேதி வரையிலான காலக்கெடுவின்படி, ஐசிசி மகளிர் டி20 அணி தரவரிசையில் தங்களின் நிலையின் அடிப்படையில் இந்த 6 அணிகளும் தகுதி பெற்றுள்ளன. மகளிர் சாம்பியன்ஸ் டிராபி தொடர், ரவுண்ட்-ராபின் முறையில் நடைபெறும். ஒவ்வொரு அணியும் மற்ற 5 அணிகளுடன் தலா ஒரு போட்டியில் விளையாடும். லீக் சுற்றுக்குப் பிறகு, புள்ளி அட்டவணையில் முதல் 2 இடங்களைப் பிடித்த அணிகளுக்கிடையே வருகின்ற 2027 பிப்ரவரி 28 ஆம் தேதி இறுதிப் போட்டி நடைபெறும்.

இலங்கை போட்டியை நடத்த தடையா?

ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிராபியின் முதல் பதிப்பை இலங்கை நடத்துவதாக இருந்தது. ஐசிசியால் பரிந்துரைக்கப்பட்ட நிர்வாக சீர்திருத்தங்களை இலங்கை கிரிக்கெட் செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளதால், தற்போது போட்டிகளை நடத்தும் உரிமை இந்தியாவிற்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2026 ஜூலை மாதம் நடைபெற்ற வருடாந்திர மாநாட்டில், இலங்கை கிரிக்கெட்டின் நிர்வாகம் குறித்து ஐசிசி தனது கவலைகளை வெளிப்படுத்தியது. மேலும், ஐசிசி வாரியக் கூட்டங்களில் இலங்கை தன்னைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டது.

ALSO READ: சொதப்பிய இலங்கை.. வாய்ப்பை பறிக்கும் ஐசிசி.. கைநழுவிய சாம்பியன்ஸ் டிராபி!

ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஒரு அறிக்கையில், “ஐசிசி மகளிர் சாம்பியன்ஸ் டிராபி 2027, மகளிர் கிரிக்கெட்டில் ஒரு அற்புதமான புதிய அத்தியாயத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. இது உலகின் தலைசிறந்த அணிகளை ஒரு பிரம்மாண்டமான மற்றும் உயர்தரமான போட்டிக்காக ஒன்றிணைக்கும்,” என்று கூறினார்.

Follow Us