AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Women’s Asia Cup 2026: அதிரடியாக தொடங்கி அடிசறுக்கிய இந்திய மகளிர்.. தாய்லாந்து அணிக்கு 160 ரன்கள் இலக்கு!

India Women vs Thailand Women: 2026 மகளிர் ஆசியக் கோப்பையில் இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 30ம் தேதி இந்திய மகளிர் அணியும், தாய்லாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 

Women’s Asia Cup 2026: அதிரடியாக தொடங்கி அடிசறுக்கிய இந்திய மகளிர்.. தாய்லாந்து அணிக்கு 160 ரன்கள் இலக்கு!
Ind Vs Thailand
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 30 Aug 2026 22:34 PM IST

2026 மகளிர் ஆசியக் கோப்பையில் இன்று அதாவது 2026 ஆகஸ்ட் 30ம் தேதி இந்திய மகளிர் அணியும், தாய்லாந்து மகளிர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற தாய்லாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த இந்திய மகளிர் அணி (Indian Womens Cricket Team) 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. ஏசிசி மகளிர் ஆசிய கோப்பை 2026 (Womens Asia Cup 2026) தொடரின் தொடக்க ஆட்டத்தில், தாய்லாந்தின் பந்துவீச்சு மற்றும் சுறுசுறுப்பான பீல்டிங் காரணமாக இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சற்று தடுமாறியது. இதன் காரணமாக, தொடக்க ஆட்டக்காரர் ஷஃபாலி வர்மாவின் அதிரடியான ஆட்டத்தையும் மீறி, தாய்லாந்து பந்துவீச்சாளர்கள் மத்திய வரிசையைச் சிதைத்து, இந்தியாவை 160 ரன்களுக்கும் குறைவாகச் சுருட்டினர்.

ALSO READ: மகளிர் ஆசிய கோப்பை இன்று தொடக்கம்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?

ஷெஃபாலி வர்மா அரைசதம்:

இந்தியா வலுவான தொடக்கத்தைப் பெற்றது. ஆனால் மூன்றாவது ஓவரில் ஸ்மிருதி மந்தனா ரன் அவுட் ஆனார். பின்னர் ஷெஃபாலி வர்மா பொறுப்பேற்று, வெறும் 36 பந்துகளில் 8 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் அபாரமாக 64 ரன்கள் எடுத்தார். பிரதிகா ராவல் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து சிறப்பான ஆதரவை வழங்கினார். இறுதியாக, கிராந்தி கௌட் 8 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 15 ரன்கள் சேர்த்து, அணியின் ஸ்கோரை 159 ஆக உயர்த்தினார். இதைத் தவிர, வேறு எந்த பேட்ஸ்மேனாலும் பெரிதாக ஒன்றும் செய்ய முடியவில்லை. 6 இந்திய பேட்ஸ்மேன்கள் இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 9 பந்துகளில் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். பார்தி ஃபுல்மாலியும் 13 ரன்களுக்கு மேல் எடுக்கத் தவறினார். அதிரடி ஆட்டக்காரர் ரிச்சா கோஷ் முதல் பந்திலேயே தனது விக்கெட்டை இழந்தார். தீப்தி ஷர்மாவும் 5 ரன்களில் ரன் அவுட் ஆனார். பிரேமா ராவத் 6 ரன்களும், நந்தனி ஷர்மா வெறும் 1 ரன்னும் எடுத்தனர். இதற்கிடையில், ஸ்ரீ சரணி 8 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்து, இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழப்பதைத் தடுத்தார்.

ALSO READ: தொடங்கிய மகளிர் ஆசியக் கோப்பை.. இந்திய மகளிர் அணியின் சாதனை என்ன?

அசத்திய சுலீபோர்ன் லாவ்மி:

தாய்லாந்து அணிக்காக சிறப்பாக பந்துவீசிய பந்துவீச்சாளராக சுலீபோர்ன் லாவ்மி திகழ்ந்தார். அவர் 4 ஓவர்களில் வெறும் 26 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷெஃபாலி, பிரதிகா மற்றும் ரிச்சா கோஷ் ஆகியோர் அவரது பந்துவீச்சில் வீழ்ந்தனர். மேலும் அவர் தீப்தி ஷர்மாவையும் ரன் அவுட் செய்தார். இதற்கிடையில், சுனிதா சதுரோங்ரதனா மூன்று ஓவர்களில் 31 ரன்களுக்கு பாரதி பூல்மாலி மற்றும் பிரேமா ராவத் ஆகியோரை ஆட்டமிழக்கச் செய்தார். டி20ஐ போட்டிகளில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவரான திபாச்சா புத்தாவோங், ஹர்மன்பிரீத் கவுரை ஆட்டமிழக்கச் செய்தார். சானிடா சுத்திருவாங் 3 ஓவர்களில் வெறும் 14 ரன்களுக்கு ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார்.

Follow Us