AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Womens Asia Cup 2026: தொடங்கிய மகளிர் ஆசியக் கோப்பை.. இந்திய மகளிர் அணியின் சாதனை என்ன?

India Womens Team T20 Record: டி20 ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. மொத்தமாக, இந்தியா டி20 ஆசிய கோப்பையில் 25 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 25 போட்டிகளில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

Womens Asia Cup 2026: தொடங்கிய மகளிர் ஆசியக் கோப்பை.. இந்திய மகளிர் அணியின் சாதனை என்ன?
ஹர்மன்ப்ரீத் கவுர்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Aug 2026 19:35 PM IST

2026 மகளிர் ஆசியக் கோப்பை (Womens T20 Asia Cup 2026) டி20 வடிவமானது நேற்று அதாவது 2026 ஆகஸ்ட் 28ம் தேதி முதல் தொடங்கியது. ஆசியக் கோப்பையில் ஹர்மன்பிரீத் கவுர் (Harmanpreet Kaur) தலைமையிலான இந்திய அணி, இதுவரை ஆடிய 25 போட்டிகளில் 21-ல் வெற்றி பெற்று, 3 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா மற்றும் தீப்தி ஷர்மா போன்ற முக்கிய வீராங்கனைகளின் பலத்துடன், இந்தியா நான்காவது முறையாக கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. 2026 மகளிர் ஆசியக் கோப்பை இந்த ஆண்டு, இத்தொடர் டி20 வடிவத்தில் நடைபெற உள்ளது. ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணியும், பட்டத்தை வெல்லும் நோக்கத்துடன் இத்தொடரில் களமிறங்கியுள்ளது. எனவே, டி20 ஆசியக் கோப்பையில் இந்திய அணியின் சாதனை என்னவென்பதைப் பார்ப்போம்.

ALSO READ: மகளிர் ஆசிய கோப்பை இன்று தொடக்கம்.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது?

டி20 ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணியின் சாதனை:

டி20 ஆசிய கோப்பையில் இந்திய மகளிர் அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. மொத்தமாக, இந்தியா டி20 ஆசிய கோப்பையில் 25 போட்டிகளில் விளையாடியுள்ளது. இந்த 25 போட்டிகளில், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணி 21 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மீதமுள்ள போட்டிகளில் இந்திய அணி நான்கு போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளனர். இதேபோல், இந்திய அணி டி20 ஆசிய கோப்பையை 3 முறை வென்றுள்ளது.

அதன்படி, 2012, 2016 மற்றும் 2022-ல் கோப்பையை வென்ற இந்திய அணி, இம்முறையும் சிறப்பாகச் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா ஆகியோர் அணிக்கு ஒரு நல்ல தொடக்கத்தை அளித்துள்ளனர். மேலும், ஸ்மிருதி மந்தனா இந்தத் தொடரின் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்தவர்களில் ஒருவராகவும் உள்ளார்.

ஜெமிமா ரோட்ரிக்ஸ் இல்லாத நிலையில், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மிடில் ஆர்டரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவது முக்கியம். இந்தத் தொடரில் ரிஷா கோஷ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் அணியின் துருப்புச் சீட்டுகளாக உள்ளனர். பந்துவீச்சுத் துறையில், கிராந்தி கௌட் மற்றும் ரேணுகா தாக்கூர் வேகப்பந்து தாக்குதலை வழிநடத்த, ஸ்ரீ சரணி மற்றும் ராதா யாதவ் சுழற்பந்துத் துறையை வழிநடத்துவார்கள்.

ALSO READ: ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்கான கிரிக்கெட் அட்டவணை.. இந்திய அணி எப்போது களமிறங்கும்?

ஆசியக் கோப்பைக்கான இந்திய மகளிர் அணி:

ஹர்மன்பிரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா (துணை கேப்டன்), ஷெபாலி வர்மா, பார்தி ஃபுல்மாலி, தீப்தி சர்மா, ரிச்சா கோஷ் (விக்கெட் கீப்பர்), ஜி. கமாலினி (விக்கெட் கீப்பர்), அருந்ததி ரெட்டி, பிரேமா ராவத், சிங் தானி, ரேதா, ஷர்தானி, ராவத் கிராந்தி கவுட், பிரதிகா ராவல்

Follow Us