AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: முதல் பந்தில் அதிக சிக்ஸர்கள்.. டி20யில் முத்திரை பதித்த அபிஷேக் சர்மா!

Abhishek Sharma Massive World Record: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய வீரர் அபிஷேக் சர்மா வரலாற்று சாதனை படைத்தார். இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து, டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அதிகமுறை (7 முறை) முதல் பந்தில் சிக்ஸர் அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை பெற்றார்.

IND vs NZ: முதல் பந்தில் அதிக சிக்ஸர்கள்.. டி20யில் முத்திரை பதித்த அபிஷேக் சர்மா!
அபிஷேக் சர்மாImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Oct 2026 18:06 PM IST

நியூசிலாந்துக்கு (IND vs NZ) எதிரான முதல் டி20 போட்டியில், இந்திய அணியின் (Indian Cricket Team) 26 வயதான அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா களம் உடனேயே சரித்திரம் படைத்தார். கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள ஹாக்லி ஓவல் மைதானத்தில், இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து அபிஷேக் சர்மா ஒரு பெரிய சாதனையை படைத்தார். இதன்மூலம், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அதிக சிக்ஸர்களை அடித்த உலகின் முதல் பேட்ஸ்மேன் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.

ALSO READ: உயர உயர பறந்த பந்து.. அர்ஷ்தீப் பந்தில் 96 மீ தூரம் சிக்ஸ் அடித்த ஜேக்கப்ஸ்!

அபிஷேக் ஷர்மா பெயரில் ஒரு மாபெரும் சாதனை:

இந்தியா வெற்றி பெற நியூசிலாந்து 226 ரன்கள் இலக்கை நிர்ணயித்தது. இந்த மிகப்பெரிய இலக்கைத் துரத்த அபிஷேக் சர்மா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகிய தொடக்க ஜோடி களமிறங்கியது. அபிஷேக் தனது அதிரடி ஆட்டத்தை முதல் பந்திலேயே ஒரு சிக்ஸர் அடித்துத் தொடங்கினார். இந்த சிக்ஸர் மூலம், டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே அதிக சிக்ஸர்கள் அடித்தவர் என்ற சாதனையை அபிஷேக் சர்மா படைத்தார்.

அபிஷேக் சர்மா இதுவரை 7 முறை ஒரு இன்னிங்ஸின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்துள்ளார். இதன் மூலம், 6 முறை இந்தச் சாதனையை நிகழ்த்தியிருந்த ஆப்கானிஸ்தானின் ஷஃபிகுல்லா ஷின்வாரியை அபிஷேக் சர்மா முறியடித்துள்ளார். 5 சிக்ஸர்களுடன் முன்னாள் இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் இந்தப் பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார்.

முதல் பந்திலேயே அதிக சிக்ஸர்களை அடித்த பேட்ஸ்மேன்கள்

  • 7 சிக்ஸர்கள் — அபிஷேக் ஷர்மா (இந்தியா)
  • 6 சிக்ஸர்கள் – ஷஃபிகுல்லா ஷின்வாரி (ஆப்கானிஸ்தான்)
  • 5 சிக்ஸர்கள் – சூர்யகுமார் யாதவ் (இந்தியா)
  • 4 சிக்ஸர்கள் — பால் ஸ்டிர்லிங் (அயர்லாந்து)
  • 4 சிக்ஸர்கள் — காலின் மன்ரோ (நியூசிலாந்து)
  • 4 சிக்ஸர்கள் — முகமது நவீத் (ஐக்கிய அரபு அமீரகம்)

ALSO READ: மிரட்டிய சஞ்சு.. விரட்டிய ஷ்ரேயாஸ்.. இந்திய அணி த்ரில் வெற்றி..!

டி20 கிரிக்கெட்டில் 200 பவுண்டரிகளை அடித்த அபிஷேக்:

நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில், அபிஷேக் டி20 சர்வதேச கிரிக்கெட்டில் 200 பவுண்டரிகள் என்ற மைல்கல்லைக் கடந்தார். இந்தச் சாதனையை எட்டிய 5வது இந்திய பேட்ஸ்மேன் ஆனார். அபிஷேக் 68 போட்டிகளில் 67 இன்னிங்ஸ்களில் 201 பவுண்டரிகளை அடித்துள்ளார். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக பவுண்டரிகள் அடித்த சாதனையை ரோஹித் சர்மா வைத்துள்ளார். ரோஹித் இதுவரை 383 பவுண்டரிகளை அடித்துள்ளார். விராட் கோலி 369, சூர்யகுமார் யாதவ் 297, மற்றும் இஷான் கிஷன் 201 பவுண்டரிகளை அடித்துள்ளனர்.

Follow Us