IND vs NZ: மிரட்டிய சஞ்சு.. விரட்டிய ஷ்ரேயாஸ்.. இந்திய அணி த்ரில் வெற்றி..!
New Zealand vs India 1st T20I: இந்தியா - நியூசிலாந்து இடையிலான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் அதிரடி அரைசதத்தால் 19.4 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது.
இந்தியா – நியூசிலாந்து இடையிலான (IND vs NZ) முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்கள் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. 226 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் அதிரடி அரைசதத்தால் 19.4 ஓவர்களில் இலக்கை விரட்டி வெற்றி பெற்றது. நியூசிலாந்து (New zealand Cricket Team) மண்ணில் ஒரு டி20 போட்டியில் இந்தியா விரட்டிப் பிடித்த அதிகபட்ச ரன்கள் இதுவாகும். சஞ்சு சாம்சன் அரைசதம் மட்டுமின்றி, 7வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்த நமன் தீர், 15 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இந்தியாவை வெற்றிக்கு அழைத்து சென்றார். சஞ்சு சாம்சனும் 33 பந்துகளில் 67 ரன்களும், கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் 28 பந்துகளில் 42 ரன்களும் எடுத்தனர். 226 ரன்கள் என்ற இலக்கை இந்தியா இரண்டு பந்துகள் மீதமிருக்க சேஸ் செய்தது.
ALSO READ: உயர உயர பறந்த பந்து.. அர்ஷ்தீப் பந்தில் 96 மீ தூரம் சிக்ஸ் அடித்த ஜேக்கப்ஸ்!
முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி:
முதலில் பேட் செய்த நியூசிலாந்து, 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய இந்திய அணி, கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. நமன் தீர் தனது 15 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார், இதில் ஐந்து பவுண்டரிகளும் இரண்டு சிக்ஸர்களும் அடங்கும்.




இந்தியாவின் அதிரடி தொடக்கம்:
நியூசிலாந்தின் 226 ரன்கள் என்ற இலக்கிற்குப் பதிலளிக்கும் விதமாக, சஞ்சு சாம்சனும் அபிஷேக் சர்மாவும் இந்தியாவிற்கு ஒரு அதிரடியான தொடக்கத்தை அளித்தனர். பவர்பிளேயில் இந்திய அணியின் ஸ்கோர் 90 ரன்களைத் தாண்டியது. அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்து 29 ரன்கள் எடுத்தார். இருப்பினும், திலக் வர்மா 3வது இடத்தில் களமிறங்கி சொதப்பினாஎ.
திலக் வர்மா 11 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சஞ்சு சாம்சனும் 33 பந்துகளில் 67 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார். 5வது இடத்தில் களமிறங்கிய இஷான் கிஷனும் சிறப்பாகச் செயல்படத் தவறினார். அவரால் ஒரு ரன் மட்டுமே எடுக்க முடிந்தது. ஆட்டம் அப்போது நியூசிலாந்தின் முழுமையான கட்டுப்பாட்டில் இருந்தது.
ALSO READ: அதிரடி காட்டிய பிலிப்ஸ், ஆலன்.. இந்திய அணி 226 ரன்கள் இலக்கு!
நமன் தீர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டிக்கு முன்பாகக் களமிறங்கிய அக்சர் படேல், 14 பந்துகளில் 24 ரன்கள் எடுத்தார். இறுதியில், நமன் தீர் நியூசிலாந்து பந்துவீச்சைச் சிதைத்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 28 பந்துகளில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார், ஆனால் நமன் தீர் அந்த அழுத்தத்திற்கு அடிபணியவில்லை. நமன் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 15 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நிதிஷ் ரெட்டி 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.