AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Watch Video: உயர உயர பறந்த பந்து.. அர்ஷ்தீப் பந்தில் 96 மீ தூரம் சிக்ஸ் அடித்த ஜேக்கப்ஸ்!

Bevon Jacobs Massive Six: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில், 24 வயதான நியூசிலாந்து வீரர் பெவோன் ஜேக்கப்ஸ், இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பந்தில் 96 மீட்டர் நீளத்திற்கு பிரமாண்ட சிக்ஸர் அடித்தார். களமிறங்கிய முதல் பந்திலேயே இந்த அதிரடி ஷாட்டை ஜேக்கப்ஸ் அடித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது.

Watch Video: உயர உயர பறந்த பந்து.. அர்ஷ்தீப் பந்தில் 96 மீ தூரம் சிக்ஸ் அடித்த ஜேக்கப்ஸ்!
பெவோன் ஜேக்கப்
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Oct 2026 16:48 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான முதல் டி20 போட்டியில், நியூசிலாந்து அணியை சேர்ந்த இளம் வீரர் பெவோன் ஜேக்கப்ஸ் 96 மீட்டர் நீளத்திற்கு ஒரு சிக்ஸரை அடித்தார். இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பந்துவீச்சில் ஜேக்கப்ஸ் இந்த பிரமாண்ட சிக்ஸரை பறக்கவிட்டார். ஜேக்கப்ஸ் அடித்ததும் பந்து வானில் அவ்வளவு உயரமாகப் பறந்ததால், பீல்டிங் செய்து கொண்டிருந்த இந்திய வீரர்கள் நின்று வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ALSO READ: முதலில் பேட் செய்யும் நியூசிலாந்து.. இந்திய பிளேயிங் லெவனில் மாற்றமா..?

பெவோன் ஜேக்கப்ஸ் இன்னிங்ஸின் முதல் பந்திலேயே இந்த சிக்ஸரை அடித்ததுதான் மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. பொதுவாக, ஒரு விக்கெட் வீழ்ந்த அடுத்த பந்திலேயே ஒரு பேட்ஸ்மேன் இதுபோன்ற அபாயகரமான ஷாட்டை ஆட மாட்டார்கள். அதற்கு முந்தைய பந்தில் அர்ஷ்தீப் சிங், டேரில் மிட்செலின் விக்கெட்டை வீழ்த்தியிருந்தார். ஆனால், 24 வயதான பெவோன் ஜேக்கப்ஸ், களமிறங்கிய உடனேயே ஒரு சிக்ஸரை அடித்து தனது நோக்கம் அதிரடி பேட்டிங்தான் என்பதை தெளிவுபடுத்தினார்.

96 மீட்டர் பறந்த சிக்ஸ்:


இந்தச் சம்பவம் நியூசிலாந்து அணியின் இன்னிங்ஸின் 13வது ஓவரில் நிகழ்ந்தது. அந்த ஓவரின் முதல் பந்திலேயே அர்ஷ்தீப் சிங்பந்துவீச்சில் , டேரில் மிட்செலை ஆட்டமிழக்கச் செய்தார். இதன்மூலம், மிட்செல் 19 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதை தொடர்ந்து, பெவோன் ஜேக்கப்ஸ் ஐந்தாவது வீரராகக் களமிறங்கினார். அர்ஷ்தீப், ஆஃப்-ஸ்டம்புக்கு வெளியே மணிக்கு 132 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு பந்தை வீசினார். ஜேக்கப்ஸ் தனது மட்டையை மிகவும் அற்புதமாகச் சுழற்றியதால், பந்து பேட்டில் பட்டவுடன் வானில் உயரமாகப் பறந்தது. இது உயர உயர பறந்து 96 மீட்டர் தூரத்திற்கு சென்று விழுந்தது.

ALSO READ: அதிரடி காட்டிய பிலிப்ஸ், ஆலன்.. இந்திய அணி 226 ரன்கள் இலக்கு!

24 வயதே ஆன ஜேக்கப்:

பெவோன் ஜேக்கப்ஸுக்கு வயது வெறும் 24 தான். இவர் 2026ம் ஆண்டு மே மாதம் வங்கதேசத்திற்கு எதிரான ஒரு டி20 போட்டியில் சர்வதேச அளவில் அறிமுகமானார். இந்தியாவிற்கு எதிராகக் களமிறங்குவதற்கு முன்பு, ஜேக்கப்ஸ் தனது குறுகிய 11 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 183 ரன்கள் எடுத்திருந்தார்.

Follow Us