AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீபாவளிக்கு முன்பே நவம்பர் மாத மகளிர் உரிமைத்தொகை? உண்மை என்ன? அரசு தரப்பில் விளக்கம்

Magalir Urimai Thogai : தீபாவளியை முன்னிட்டு, 2026 நவம்பர் மாதத்துக்கான மகளிர் உரிமைத்தொகை முன்கூட்டியே, மாதத்தின் முதல் வாரத்திலேயே வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. ஆனால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு முன்பே நவம்பர் மாத மகளிர் உரிமைத்தொகை? உண்மை என்ன? அரசு தரப்பில் விளக்கம்
மகளிர் உரிமைத் தொகை
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Oct 2026 21:14 PM IST

சென்னை, அக்டோபர் 22 : தீபாவளியை முன்னிட்டு, 2026 நவம்பர் மாதத்துக்கான மகளிர் உரிமைத்தொகை (Magalir Urimai Thogai) முன்கூட்டியே, மாதத்தின் முதல் வாரத்திலேயே வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படும் என கடந்த சில நாட்களாக தகவல் பரவி வந்தது. ஆனால் இதுகுறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

தீபாவளிக்கு முன்பே நவம்பர் மாத மகளிர் உரிமைத்தொகை?

இந்த 2026 ஆண்டு தீபாவளிப் பண்டிகை நவம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில் மகளிர் உரிமைத்தொகை வழக்கமாக ஒவ்வொரு மாதமும் 1 ஆம் தேதிதான் பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது. அதாவது, நவம்பர் மாதத் தொகை தீபாவளி முடிந்த ஒரு வாரத்துக்குப் பிறகே கிடைக்கும். இதனால், பண்டிகைக்கான புத்தாடைகள், அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்கு உதவும் வகையில், இந்த மாதத் தொகையை முன்கூட்டியே வழங்க வேண்டும் எனப் பயனாளிகள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்தது.

இதையும் படிக்க : குலசேகரன்பட்டினத்தில் கொடூரம்.. முத்தாரம்மன் கோவிலுக்கு சென்ற பக்தர் கொலை.. தந்தை-மகன்கள் வெறிச்செயல்!

அரசுத் தரப்பு விளக்கம்

இந்த நிலையில், 2026 நவம்பர் மாத உரிமைத்தொகை தீபாவளிக்கு முன்பே வழங்கப்பட உள்ளதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்தன. ஆனால், இந்தத் தகவல் உண்மையல்ல என்றும், தொகையை முன்கூட்டியே வழங்குவது குறித்து அரசு தற்போது எந்தப் பரிசீலனையும் மேற்கொள்ளவில்லை என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை, முன்கூட்டியே பணம் கிடைக்கும் என்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை வழங்கப்படும் எனத் திமுக தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தது. அதன்படி, தகுதியுள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை, 2023 ஆம் ஆண்டில் அப்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தற்போது சுமார் 1.31 கோடி பெண்கள் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

ரூ.2,500 ஆக உயருமா?

உரிமைத்தொகையை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் பெண்கள் மத்தியில் நீண்ட காலமாக நிலவி வருகிறது. ஆனால், தொகை உயர்வு குறித்தும் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. எனவே, தற்போதைக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் நடைமுறையே தொடர்கிறது. விரைவில் இந்த திட்டத்தின் கீழ் உயர்த்தப்படும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதையும் படிக்க : பழனி முருகன் கோயில் பக்தர்கள் கவனத்துக்கு.. ரோப் கார் ஆன்லைன் முன்பதிவு நிறுத்தம்.. நிர்வாகம் அறிவிப்பு!

தமிழகத்தைத் தொடர்ந்து, பல மாநிலங்களும் பெண்களுக்கான மாதாந்திர நிதியுதவித் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசத்தில் மாதம் ரூ.1,500, கர்நாடகத்தில் ரூ.2,000, டெல்லி, ஜார்க்கண்டில் ரூ.2,500 எனப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

Follow Us