AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

உருவாகும் முரசு புயல்… நாளை 27 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu weather today : தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

உருவாகும் முரசு புயல்… நாளை 27 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும் – வானிலை மையம் எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 22 Oct 2026 15:04 PM IST

சென்னை, அக்டோபர் 22 : தமிழக கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த சில நாட்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, அக்டோபர் 22, 2026 இன்று 17 மாவட்டங்களிலும், அக்டோபர் 23, 202 27 மாவட்டங்களிலும் கன முதல் மிக கனமழை (Heavy Rain Alert) பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உருவாகும் முரசு புயல்

தென்கிழக்கு வங்கக் கடலில் அக்டோபர் 23, 2026 நாளை புதிதாக உருவாகவுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும், அப்படி புயலாக மாறினால் அதற்கு ‘முரசு புயல்’ என பெயர் சூட்டப்படும். வங்கக் கடல், அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கான பெயரை சூட்டும் குழுவிடம் இந்தப் பெயரை இந்தியா பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : உணவுப்பழக்கம் குறித்து இழவாகப் பேசிய ஆசிரியர்.. பள்ளி மாணவன் எடுத்த விபரீத முடிவு.. கோவையில் சோகம்!!

முன்னதாக தென்மேற்கு வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில் அக்டோபர் 22 2026 இன்று, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோயம்புத்தூர், நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 17 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும், திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய 9 மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மதுரை – குருவாயூர் விஸ்டாடோம் கண்ணாடி கூரை ரயில் சேவை தொடக்கம்.. இயற்கை அழகை ரசிக்கலாம்!!

நாளை 27 மாவட்டங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு

அதனைத் தொடர்ந்து அக்டோபர் 23, நாளை கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 24 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

Follow Us