Tamil Nadu Weatherman Update: மழைக்கான ஹாட்ஸ்பாட்டாக மாறும் தென் தமிழகம்.. எங்கெல்லாம் மழை இருக்கும்? வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு..
Tamil Nadu Rains Updates: தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தென் தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மன்னார் வளைகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, அக்டோபர் 22ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 22, 2026: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்தச் சூழலில், மன்னார் வளைகுடா, அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் வளிமண்டலச் சுழற்சிகள் நிலவி வருகின்றன. குறிப்பாக, வங்கக்கடலில் நிலவும் சுழற்சி அக்டோபர் 23ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகத்தில் அடுத்த சில நாட்களுக்கு மழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை
அக்டோபர் 22ஆம் தேதியான இன்று, தமிழகத்தின் 17 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல், திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் தொடரும் மழை – வானிலை ரிப்போர்ட்..
தென் தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – பிரதீப் ஜான்:
South and West Tamil Nadu are likely to be the major hotspots, with heavy to very heavy rainfall expected in several districts.
======================South Tamil Nadu – Major Hotspots
—————
With the low-pressure area lying over the Gulf of Mannar, Kanyakumari, Thoothukudi, Tirunelveli and Tenkasi districts are likely to witness heavy to very heavy rainfall.Other southern districts, including Virudhunagar, Madurai, Ramanathapuram and Theni, can also expect good rainfall.
Western Tamil Nadu
—————–
Dindigul, Coimbatore, Tiruppur, the Nilgiris, Karur and adjoining districts may also receive good rainfall as the system moves towards the Arabian Sea tomorrow.Across Tamil Nadu all districts
————————-
From the interior districts to the coastal belt, rainfall is expected across much of the state. The interiors are also likely to get their share of rains.Chennai and Surrounding Areas – Day rains possible from today
——————–
As seen in the image, when a low-pressure area lies over the Gulf of Mannar, it can pull easterly winds and rain-bearing clouds well into the interior regions. Not only Chennai, Vellore, Ranipet and the catchment areas can also receive rainfall. Even during the daytime, sudden, short-duration intense spells are possible in Chennai.Watchout for Coonoor, Majolai belt for extreme rains.
— Tamil Nadu Weatherman (@praddy06) October 21, 2026
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான், தென் தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். மன்னார் வளைகுடாவில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக, அக்டோபர் 22ஆம் தேதி கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விருதுநகர், மதுரை, ராமநாதபுரம் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழைப்பதிவு இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: மாயமான 1 வயது குழந்தை.. 25 நாட்களாகியும் கண்டுபிடிக்க முடியாமல் திணறும் காவல்துறை.. ராணிப்பேட்டையில் சோகம்!!
மேற்கு தமிழகத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு
மேற்கு தமிழகத்தைப் பொறுத்தவரையில், அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டலச் சுழற்சி காரணமாக திண்டுக்கல், கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் நல்ல மழை பெய்யக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, குன்னூர் மற்றும் மாஞ்சோலை பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகப் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, உள் தமிழகம் மற்றும் கடலோர மாவட்டங்களின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் மழை அதிகரிக்குமா?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில், மன்னார் வளைகுடாவில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியுடன் தொடர்புடைய காற்றின் திசையைப் பொறுத்து மழையின் அளவு மாறக்கூடும் எனப் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். சென்னை மட்டுமின்றி, வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது. பகல் நேரங்களில் அவ்வப்போது திடீர் மழை பெய்யக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.