AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் தொடரும் மழை – வானிலை ரிப்போர்ட்..

Rainfall Alert: அக்டோபர் 22ஆம் தேதியான இன்று, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை.. சென்னையில் தொடரும் மழை – வானிலை ரிப்போர்ட்..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 22 Oct 2026 06:25 AM IST

அக்டோபர் 22, 2026: தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக, சென்னை உள்ளிட்ட வடகடலோர தமிழகப் பகுதிகளில் அவ்வப்போது கனமழை பதிவாகி வருகிறது. இதற்கிடையே, அக்டோபர் 22 முதல் 26ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை முதல் மிக கனமழை வரையிலான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

17 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை:

அக்டோபர் 22ஆம் தேதியான இன்று, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மதுரை, கோவை, நீலகிரி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருச்சி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், நாமக்கல், விழுப்புரம், திருப்பூர் மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 23: 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்:

அக்டோபர் 23ஆம் தேதி கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, அரியலூர், கடலூர், விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: காவல் நிலைய அன்றாட செலவினங்களுக்காக ரூ. 71 கோடி நிதி ஒதுக்கீடு – தமிழக அரசு அறிவிப்பு

அக்டோபர் 26ஆம் தேதி வரை தொடரும் மிக கனமழை:

அக்டோபர் 24ஆம் தேதி நெல்லை, கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மதுரை, தேனி, திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 25ஆம் தேதி நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திண்டுக்கல், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 26ஆம் தேதி புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், திருப்பூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வண்டலூர் பூங்காவில் பறவைக் காய்ச்சல் உறுதி – பூங்கா அடுத்த 2 நாட்களுக்கு மூடல்

சென்னையில் தொடர்ந்து பெய்யும் மழை

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரையில், கடந்த சில தினங்களாக மாலை முதல் இரவு நேரம் வரையிலும், அதிகாலை நேரத்திலும் தொடர்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது கனமழை பதிவாகி வரும் நிலையில், பகல் நேரங்களிலும் சில சமயங்களில் திடீர் மழை பெய்து வருகிறது.

சென்னையில் இன்றைய தினம் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னையில் வெப்பநிலையின் தாக்கம் கணிசமாகக் குறைந்துள்ளது. அதேசமயம், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

 

Follow Us