AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs NZ: இவ்வளவு பெரிய ரன் சேஸிங்கிற்கு இதுதான் உதவியது.. ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!

Sanju Samson's Match-Winning Knock: இந்தியா - நியூசிலாந்து முதல் டி20 போட்டியில் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில் 67 ரன்கள் குவித்து, 226 ரன்கள் இலக்கை துரத்தி இந்தியா வெற்றி பெற உதவினார். விக்கெட் கீப்பராக 200+ ஸ்டிரைக் ரேட்டில் அதிக 50+ ரன்கள் அடித்த உலக சாதனையையும் படைத்தார். வெற்றிக்குப் பின், கள நிலவரம் மற்றும் சமூக ஊடக விமர்சனங்கள் குறித்த தனது கருத்துக்களை சாம்சன் பகிர்ந்துள்ளார்.

IND vs NZ: இவ்வளவு பெரிய ரன் சேஸிங்கிற்கு இதுதான் உதவியது.. ரகசியத்தை உடைத்த சஞ்சு சாம்சன்!
சஞ்சு சாம்சன்Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 22 Oct 2026 20:37 PM IST

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு (IND vs NZ) இடையேயான முதல் டி20 போட்டியில் மிகப்பெரிய இலக்கை துரத்தி இந்திய அணி வெற்றி பெற்றது. இந்தியாவின் வெற்றிக்குக் காரணமானவர் இந்திய அணியின் (Indian Cricket Team) விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். வலது கை பேட்ஸ்மேனான சாம்சன் வெறும் 33 பந்துகளில் 67 ரன்கள் எடுத்தார். அவரது ஆட்டத்தின் பலத்தால், நியூசிலாந்து நிர்ணயித்த 226 ரன்கள் என்ற இலக்கை இந்தியா வெற்றிகரமாகத் துரத்திப் பிடித்தது. 2 பந்துகள் மீதமிருக்க இந்தியா போட்டியை வென்றது. இந்த வெற்றியின் மூலம், சஞ்சு சாம்சன் ஒரு சிறப்பு உலக சாதனையையும் படைத்துள்ளார்.

ALSO READ: முடிந்த நோ பால் வீசாத சாதனை.. களமிறங்கியதும் புவனேஷ்வருக்கு ஏற்பட்ட அடி!

வெற்றிக்கு பிறகு சஞ்சு கூறியது என்ன..?

நியூசிலாந்துக்கு எதிரான தனது சிறப்பான ஆட்டத்திற்காக சஞ்சு சாம்சனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. தனது ஆட்டம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவர், அந்த வெற்றியின் ரகசியத்தையும் வெளிப்படுத்தினார். ஒரு விக்கெட் கீப்பராக களத்தில் இருக்கும்போது ஆடுகளத்தின் போக்கைக் கணிப்பது உதவும் என்றும் கூறினார். இருப்பினும், கிறிஸ்ட்சர்ச்சில் நடந்த இரண்டாவது இன்னிங்ஸில் ஆடுகளம் மாறியிருந்ததாகவும் சாம்சன் குறிப்பிட்டார். வெற்றிக்கு பிறகு பேசிய சஞ்சு சாம்சன் பேசியதாவது, “விக்கெட் கீப்பிங் செய்துகொண்டிருந்தபோது, ​​இந்த ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஆனால், பேட்டிங் செய்யக் களமிறங்கிய பிறகு, நிலைமை முற்றிலும் வேறுபட்டிருந்தது. முதல் இன்னிங்ஸில், பந்து சற்று தாமதமாக வந்தது. ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில், பந்து பேட்டிற்கு நன்றாக வரத் தொடங்கியது. இதற்கெல்லாம் காரணம் மழைதான். நான் பேட்டிங்கை முழுமையாக ரசித்தேன். மற்றவர்களும் இதேபோல்தான் பேட்டிங் செய்தார்கள்.

மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்தியாவுக்காக விளையாடுவது எளிதல்ல. நிறையப் பேச்சுக்களும் குழப்பங்களும் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்து உண்டு. சமூக ஊடகங்களில் மக்கள் சொல்வதை நான் கண்டுகொள்வதில்லை. என் ஆட்டத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. நான் அதை மதிக்கிறேன், கிரிக்கெட் விளையாடுவதில் கவனம் செலுத்துகிறேன். யாரையும் தவறு என்று நிரூபிக்கும் எண்ணத்துடன் நான் விளையாடுவதில்லை” என்று கூறினார்.

ALSO READ: மிரட்டிய சஞ்சு.. விரட்டிய ஷ்ரேயாஸ்.. இந்திய அணி த்ரில் வெற்றி..!

சஞ்சு சாம்சனின் சிறப்பு உலக சாதனை

டி20 கிரிக்கெட்டில், 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் ஒரு விக்கெட் கீப்பர் அடித்த அதிக 50-க்கும் மேற்பட்ட ரன்கள் என்ற சாதனையை சஞ்சு சாம்சன் படைத்துள்ளார். சஞ்சு சாம்சன் இதுவரை 7 முறை 200 அல்லது அதற்கு மேற்பட்ட ஸ்டிரைக் ரேட்டில் 50-க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்துள்ளார். இங்கிலாந்தின் ஜோஸ் பட்லர் 6 முறை அவ்வாறு செய்து இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். குயின்டன் டி காக் 4 முறையும், ஷாய் ஹோப் மற்றும் பில் சால்ட் தலா 3 முறையும் அவ்வாறு செய்துள்ளனர்.

Follow Us