AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Smriti Mandhana: ஒரே ஒரு சதம்.. 10 முக்கிய சாதனைகளை தூக்கிய ஸ்மிருதி மந்தனா!

Smriti Mandhana 10 Major Records: ஸ்மிருதி மந்தனா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 18 சதங்களுடன் உலகிலேயே அதிக சதங்களை அடித்தவராக உள்ளார். மெக் லேனிங் மற்றும் லாரா வோல்வார்ட் தலா 17 சதங்களை அடித்துள்ளனர். இந்த விஷயத்தில் மந்தனா ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.

Smriti Mandhana: ஒரே ஒரு சதம்.. 10 முக்கிய சாதனைகளை தூக்கிய ஸ்மிருதி மந்தனா!
ஸ்மிருதி மந்தனாImage Source: BCCI Women
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 04 Sep 2026 16:37 PM IST

2026 மகளிர் ஆசியக் கோப்பை போட்டியில் இந்தியா, நேற்று அதாவது 2026 செப்டம்பர் 3ம் தேதி ஹாங்காங்கை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி (Indian Womens Cricket Team) 193 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய ஹாங்காங் அணி வெறும் 56 ரன்களுக்கு ஆட்டமிழந்ததால், இந்தியா 137 ரன்கள் வித்தியாசத்தில் ஒரு மறக்க முடியாத வெற்றியைப் பெற்றது. இப்போட்டியில் ஸ்மிருதி மந்தனா 124 ரன்கள் எடுத்தார். ஸ்மிருதி மந்தனா சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற பெருமையைப் பெற்றது மட்டுமல்லாமல், அதிக சதங்கள் அடித்தவர் என்ற சாதனையையும் முறியடித்துள்ளார். அதன்படி, இந்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா (Smriti Mandhana) இது போன்ற 10 சாதனைகளை முறியடித்தார்.

ALSO READ: மிதாலியின் சாதனையை முறியடித்த ஸ்மிருதி மந்தனா: புதிய சாதனை

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள்

ஸ்மிருதி மந்தனா 10,880 ரன்களுடன் மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்தவர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது கிரிக்கெட் வாழ்க்கையில் 10,868 ரன்கள் எடுத்திருந்த மிதாலி ராஜ் வைத்திருந்த சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

  • 10880 ரன்கள் – ஸ்மிருதி மந்தனா
  • 10868 ரன்கள் – மிதாலி ராஜ்
  • 10740 ரன்கள் – சூசி பேட்ஸ்

அதிக சதங்கள்:

ஸ்மிருதி மந்தனா தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் 18 சதங்களுடன் உலகிலேயே அதிக சதங்களை அடித்தவராக உள்ளார். மெக் லேனிங் மற்றும் லாரா வோல்வார்ட் தலா 17 சதங்களை அடித்துள்ளனர். இந்த விஷயத்தில் மந்தனா ஒரு உலக சாதனையை படைத்துள்ளார்.

  • 18 சதங்கள் – ஸ்மிருதி மந்தனா
  • 17 சதங்கள்ள் – மெக் லானிங்
    17 சதங்கள் – லாரா வோல்வர்ட்

அதிக 50+ ஸ்கோர்:

மகளிர் சர்வதேச கிரிக்கெட்டில் ஸ்மிருதி மந்தனா ஒரு இன்னிங்ஸில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை 93-வது முறையாக எடுத்தார். இதன் மூலம், அதிக 50+ ரன்கள் எடுத்ததற்கான மிதாலி ராஜின் உலக சாதனையை ஸ்மிருதி மந்தனா சமன் செய்தார்.

டி20 போட்டியில் 2 சதங்கள் அடித்த முதல் இந்தியர்

டி20 சர்வதேச கிரிக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட சதங்களை அடித்த முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். அவரைத் தவிர, ஹர்மன்பிரீத் கவுர் மட்டுமே டி20 போட்டிகளில் சதம் அடித்துள்ள நிலையில், மந்தனா தற்போது இரண்டு சதங்களைப் பெற்றுள்ளார்.

29வது 50 ப்ளஸ் பார்ட்னர்ஷிப்:

ஸ்மிருதி மந்தனாவும் ஷஃபாலி வர்மாவும் ஹாங்காங்கிற்கு எதிராக முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தனர். டி20 சர்வதேச கிரிக்கெட்டில் இருவரும் இணைந்து 50 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைப்பது இது 29வது முறையாகும். ஐக்கிய அரபு அமீரகத்தின் இஷா ஓஜாவும் தீர்த்தா சதீஷும் 23 முறை இவ்வாறு செய்துள்ளனர்.

ஆசிய கோப்பையில் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்

மகளிர் டி20 ஆசியக் கோப்பையில் ஹாங்காங்கிற்கு எதிராக 124 ரன்கள் எடுத்ததன் மூலம், மந்தனா தற்போது அதிகபட்ச தனிநபர் ஸ்கோருக்கான சாதனையை தன்வசம் வைத்துள்ளார். இதற்கு முன்பு, 2024-ல் 119 ரன்கள் எடுத்த இலங்கையின் சமரி அட்டபட்டு இந்த சாதனையை வைத்திருந்தார்.

டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள்

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்களை அடித்த பெண் வீராங்கனை என்ற பெருமையை ஸ்மிருதி மந்தனா பெற்றுள்ளார். ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் தனது சதத்தில் ஏழு சிக்ஸர்களை விளாசிய அவர், தற்போது 95 சிக்ஸர்களை எட்டியுள்ளார். இதுவே உலகில் அவரது அதிகபட்ச சிக்ஸர் எண்ணிக்கையாகும்.

ஒரு இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள்

ஒரு டி20 இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஸ்மிருதி மந்தனா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்மிருதி மந்தனா ஹாங்காங்கிற்கு எதிராக ஏழு சிக்ஸர்களை அடித்தார். இந்த இந்திய சாதனையை ஹர்மன்பிரீத் கவுர் வைத்திருந்தார், 2018-ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் 8 சிக்ஸர்களை அடித்திருந்தார்.

ஒரு காலண்டர் ஆண்டில் அதிகபட்ச 500+ ரன்கள் (டி20)

டி20 கிரிக்கெட்டில் ஒரு காலண்டர் ஆண்டில் 500 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுத்ததற்கான உலக சாதனையையும் மந்தனா தன்வசம் வைத்துள்ளார். மந்தனா இந்தச் சாதனையை 4 முறையும், சமரி அதபட்டு மற்றும் லாரா வோல்வார்ட் தலா 3 முறையும் நிகழ்த்தியுள்ளனர்.

ALSO READ: பாகிஸ்தானை அடுத்த போட்டியில் எதிர்கொள்ளும் இந்திய மகளிர்.. எப்போது, எங்கு காணலாம்?

டி20 போட்டிகளில் (இந்தியாவுக்காக) அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்

ஹாங்காங்கிற்கு எதிராக ஸ்மிருதி மந்தனா எடுத்த 124 ரன்கள், டி20 போட்டிகளில் இந்தியாவின் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர் ஆகும். அவர் இதற்கு முன் எடுத்திருந்த 112 ரன்களை முறியடித்தார். 2018-ல் 103 ரன்கள் எடுத்த ஹர்மன்பிரீத் கவுர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

Follow Us