கோவையில் நள்ளிரவில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை.. கடவுள் ரூபத்தில் வந்த தெருநாய்.. தலைதெரிக்க ஓடிய 16 வயது சிறுவன்!
Coimbatore Harassment Incident : கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாலையோரம் படுத்து தூங்கி கொண்டிருந்த மனநலம் பாதித்த இளம் பெண்ணை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற நிலையில், அவரை தெருநாய் விரட்டி விரட்டி கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
கோயம்புத்தூர் மாவட்டம், துடியலூர் அருகே என். ஜி. ஓ. காலனி பகுதியில் செயல்பட்டு வந்த பெட்டிக்கடைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கடையின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், துடியலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்தபோது அதில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று பதிவாகி இருந்தது தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் நள்ளிரவில் சாலை ஓரம் மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண் ஒருவர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக நடந்து சென்ற நபர் ஒருவர் அந்த பகுதியில் நின்று கொண்டு ஆள் நடமாட்டத்தை நோட்டம் விடுகிறார். பின்னர், சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க ஆரம்பிக்கிறார்.
பெண்ணுக்கு தொல்லை கொடுத்தவரை விரட்டி விரட்டி கடித்த நாய்
இதை எதிர்பாராத அந்த இளம் பெண் சத்தம் போட்டார். அப்போது, அங்கு சாலை ஓரம் படுத்து தூங்கிக் கொண்டிருந்த வெள்ளை நிற தெரு நாய் ஒன்று வேகமாக ஓடி வந்து அந்த பெண்ணுக்கு ஆதரவாக நின்று, அந்த இளைஞரை பார்த்து குறைத்து கடிக்க முயன்றது. நாயின், கடுமையான அச்சுறுத்தலால் பயந்து போன அந்த நபர் அங்கிருந்து ஓட்டம் பிடித்து ஓடினார். இருந்தாலும், அந்த தெருநாய் அந்த இளைஞரை விடாமல் துரத்தி சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேலும் படிக்க: நாமக்கல்லில் கொடூர சாலை விபத்து.. ஒரே நேரத்தில் 4 மாணவிகள் பரிதாப பலி!




16 வயது சிறுவனை கைது செய்த போலீசார்
இந்த சம்பவம் தொடர்பாக துடியலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அழிக்க முயன்ற நபர் துடியலூர் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. அதன் அடிப்படையில், அந்த சிறுவனை கைது செய்த போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, அந்த சிறுவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
கடவுள் ரூபத்தில் வந்து நின்ற தெருநாய்
மற்றொரு குற்ற சம்பவம் தொடர்பாக போலீசார் மேற்கொண்ட விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு நேர முயன்ற பாலியல் வன்கொடுமை சம்பவம் தெரியவந்துள்ளது. அதிலும், கடவுள் ரூபத்தில் அந்த பெண்ணுக்கு தெரு நாய் ஒன்று உதவியது நெகிழ்ச்சியாக அமைந்துள்ளது என வீடியோ காட்சியை பார்த்த பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க: தென்காசியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய லைன்மேன்… பொறி வைத்து தூக்கிய ஊழல் தடுப்பு போலீஸ்!