தம்பியை தாக்கிய வழக்கு.. புதுச்சேரி நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார் அமைச்சர் மரியவில்சன்!
Minister Maria Wilson Appeared Court : தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் அடிதடி வழக்கு தொடர்பாக புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜராகி வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிக்கையை பெற்றுக் கொண்டார். இது தொடர்பான முழு விவரத்தை இந்தப் பதிவில் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.
தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மரிய கிளோத் என்பவர் தனது குடும்பத்தினருடன் புதுச்சேரி மாநிலத்தில் வசித்து வருகிறார். இவரை, மரிய வில்சன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கடுமையாக தாக்கியிருந்தனர். இது தொடர்பான வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், ஆஜராக கோரி அமைச்சர் மரிய வில்சனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால், சுமார் 3 முறைகளுக்கு மேல் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை ( செப்டம்பர் 4) புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகி தனது குற்றப்பத்திரிகை மற்றும் அது தொடர்பான பென் டிரைவ் ஆகியவற்றை பெற்றுக் கொண்டார். அமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் புதுச்சேரி, லாஸ்பேட்டை பகுதியில் வசித்து வருகிறார்.
மரியவில்சன் ஒன்றும் இங்கிலாந்து இளவரசர் கிடையாது
இவரை, சொத்து பிரச்சனை காரணமாக மரிய வில்சன் உருட்டு கட்டைகளால் கடுமையாக தாக்கி இருந்தார். இது தொடர்பாக, லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில், இந்த வழக்கு புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக கோரி மரிய வில்சனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற விசாரணையில் அமைச்சர் மரிய வில்சன் ஆஜராகவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த நீதிபதி அமைச்சர் மரிய வில்சன் ஒன்றும் இங்கிலாந்து இளவரசர் கிடையாது.
மேலும் படிக்க: திமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. “மா.செ. தேர்தலைத் தள்ளிப்போடுங்க!”.. மூத்த நிர்வாகிகள் vs கனிமொழி மோதல்!!




ஆஜராகவில்லையெனில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்
அமைச்சர் ஆவதற்கு முன்பு நீதிமன்றத்தில் ஆஜராகி வந்த அவர், தற்போது, அமைச்சர் ஆன நிலையில் எதற்காக நீதிமன்றத்தில் ஆஜராவதை தவிர்த்து வருகிறார். பிரதமராக இருந்த நரசிம்ம ராவ்வே வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார். அப்படி இருக்கையில், அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜர் ஆவதில் என்ன இடையூறு உள்ளது என்று காட்டமான விமர்சனங்களை முன் வைத்திருந்தார். அத்துடன், இன்று அவர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சமரச மன்றத்திலும் தீர்வு காணப்படவில்லை
இந்த நிலையில், தற்போது அவர் நீதிமன்றத்தில் ஆஜராகி தனது குற்றப்பத்திரிக்கையை பெற்றுள்ளார். இதனிடையே, இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு மரிய வில்சன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். ஆனால், இரு தரப்பினர் இடையே சமரச தீர்வு காண வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. அதன்படி, மரிய வில்சன் மற்றும் அவரது சகோதரர் மரிய கிளோத் தரப்பினரிடையே சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், அதில் உடன்பாடு எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: 16-வது நாளாகத் தொடரும் தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்.. களத்தில் இறங்கிய அமைச்சர்கள்.. கொடுத்த நேரடி வாக்குறுதி!!