தோஷம் கழிப்பதாக நிர்வாண பூஜை – கனடா பெண்ணை மிரட்டி பணம் பறித்த ஜோசியர் கைது
Chennai Astrologer Threatens Woman : சென்னையில் தொலைக்காட்சியில் புகழ்பெற வேண்டும் என்றால் நிர்வாண பூஜை நடத்த வேண்டும் என்று கூறி பெண்ணை மிரட்டி பணம் பறித்த கிளி ஜோசியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நிர்வாண வீடியோவை காட்டி ஜோசியர் அந்த பெண்ணை மிரட்டி வந்துள்ளார்.
சென்னை, செப்டம்பர் 4 : நிர்வாண பூஜை செய்தால் தொலைக்காட்சியில் புகழ்பெறலாம் என்று கூறி கனடாவை சேர்ந்த பெண்ணிடம் பணம் பறித்த ஜோசியர் கைது செய்யப்பட்டார். இலங்கை தமிழரான பெண் கனடாவில் குடியுரிமை பெற்றவர். தனது கணவரிடம் இருந்து விவகாரத்து பெற்று தற்போது சென்னையில் வசித்து வருகிறார். மேலும், சென்னையில் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருவதாக கூறப்படுகிறது.
கனடா பெண்ணை மிரட்டி பணம் பறித்த ஜோசியர் கைது
இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அப்போது ஜோசியர் அந்த பெண்ணை பல்வேறு தகவல்களை கூறிய நிலையில், அவரை நம்பியுள்ளார். மேலும் தனக்கு தொலைக்காட்சி தொடர்களில் புகழ் பெற வேண்டும் என்ற விருப்பத்தையும் கூறியிருக்கிறார். இதனையடுத்து அவரை ஏமாற்ற நினைத்த ஜோசியர் நிர்வாண பூஜை பற்றி கூறியிருக்கிறார்.
இதையும் படிக்க : திமுகவில் வெடித்த உட்கட்சி பூசல்.. “மா.செ. தேர்தலைத் தள்ளிப்போடுங்க!”.. மூத்த நிர்வாகிகள் vs கனிமொழி மோதல்!!




குறிப்பாக நிர்வாண பூஜை செய்தால் நீங்கள் நினைத்த காரியம் நடக்கும் என்று தெரிவித்ததால் அதனை நம்பி தான் தங்கியிருந்த அறையில் நிர்வாண பூஜையில் ஈடுபட்டிருக்கிறார். அதனை பெசண்ட் நகர் கடற்கரையில் இருந்து மொபைல் போனில் பார்த்தபடி அவருக்கு பூஜை முறைகளை சொல்லியிருக்கிறார். இதற்காக அவர் ரூ.20,000 கட்டணமாக வசூலித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் அடுத்த சில நாட்கள் அவரிடம் நிர்வாணம் வீடியோ இருப்பதாகவும் அதனை சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவதாக கூறி மிரட்டியிருக்கிறார். இதனை நம்பி அவர் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அந்த பெண் கடந்த செப்டம்பர் 2, 2026 அன்று மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து அவரது புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜோசியர் குறித்து விசாரிக்கத் தொடங்கினர். விசாரணையில் அவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இசக்கி முத்து என்பது தெரிய வந்தது.
இதையும் படிக்க : சென்னையில் புதிய தலைமைச் செயலகம்.. அமையப்போகும் 3 முக்கிய இடங்கள் இவைதான்?
இதனையடுத்து அவர் குற்றாலத்தில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதனையடுத்து அவரை காவல்துறையினர் செப்டம்பர் 3, 2026 நேற்றிரவு காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்த நிலையில் ஜோசியர் வேறு யாரையும் இதுபோன்று ஏமாற்றியிருக்கிறாரா என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்
இது போன்று பூஜை என கூறி ஏமாற்றும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருவது காவல்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் இது போன்ற நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் யார் மீதும் சந்தேகம் இருந்தால் புகார் தெரிவிக்க வேண்டும் என்று காவல்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.