AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

சென்னையில் புதிய தலைமைச் செயலகம்.. அமையப்போகும் 3 முக்கிய இடங்கள் இவைதான்?

New Secretariat in Chennai: சென்னையில் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய ஒருங்கிணைந்த வளாகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதற்காக கிண்டி, நந்தம்பாக்கம் மற்றும் பட்டினப்பாக்கம் ஆகிய 3 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் ஒன்றை தேர்வு செய்து நடப்பு மாதத்தின் மத்தியில் தமிழ்நாடு அரசு முறைப்படி அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையில் புதிய தலைமைச் செயலகம்.. அமையப்போகும் 3 முக்கிய இடங்கள் இவைதான்?
கோப்புப் படம்
Esakkiraja Selvarathinam
Esakkiraja Selvarathinam | Published: 04 Sep 2026 11:28 AM IST

சென்னை, செப்.04: தமிழ்நாடு அரசின் நிர்வாக மையமாக விளங்கும் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்திற்குப் புதிய மற்றும் நவீன ஒருங்கிணைந்த வளாகத்தைக் கட்டுவதற்கான முயற்சிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. சென்னையில் புதிய தலைமைச் செயலக வளாகம் அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், இதற்கான நிலத்தைத் தேர்வு செய்யும் பணிகளில் தமிழ்நாடு அரசு வேகம் காட்டி வருகிறது. முன்னதாக கலைஞர் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சிக் காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் தொடர்ச்சியாக, தற்போது சென்னையில் மிக முக்கிய 3 இடங்கள் அடையாளம் காணப்பட்டுப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க: தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பாம்புக்கடி உயிரிழப்புகள்.. 56,000-க்கும் மேற்பட்டோர் பாதிப்பு.. அதிர்ச்சித் தகவல்!!

தலைமைச் செயலகத்தின் வரலாற்றுப் பின்னணி:

கடந்த 2003-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது கைவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கலைஞர் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பிரம்மாண்டமான புதிய தலைமைச் செயலகக் கட்டிடம் கட்டப்பட்டுத் திறக்கப்பட்டது. இருப்பினும், 2011-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அரசு, அந்தப் புதிய தலைமைச் செயலக வளாகத்தைப் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையாக மாற்றி அமைத்தது. இதனால் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே தலைமைச் செயலகம் தொடர்ந்து இயங்கி வருகிறது.

அடையாளம் காணப்பட்டுள்ள 3 இடங்கள்:

தற்போது அமையவுள்ள புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலக வளாகத்திற்காகச் சென்னையில் 3 முக்கிய இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. முதலாவதாக, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு எதிரே அகலமான சர்தார் பட்டேல் சாலையில் அமைந்துள்ள நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம். இரண்டாவதாக, நந்தம்பாக்கத்தில் முன்பு இயங்கி வந்த இந்தியன் டிரக்ஸ் அண்ட் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் அமைந்திருந்த நிலப்பகுதி. மூன்றாவதாக, பட்டினப்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் மேம்படுத்தப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதி ஆகியவை அடையாளம் காணப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதையும் படிக்க : தமிழக காவல் துறை ரூ.212 கோடியில் நவீன மயமாக்குதல்.. ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள்.. முதல்வர் விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்!

சிறப்பம்சங்களும் நிலவும் சவால்களும்:

கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையமானது 2003-ஆம் ஆண்டில் ஜெயலலிதாவால் அடிக்கல் நாட்டப்பட்ட 43 ஏக்கர் நிலத்தின் ஒரு பகுதியாகும்; இது அகலமான பாதையைக் கொண்டிருந்தாலும் இதன் அருகில் அதிக மாணவர்கள் படிக்கும் அண்ணா பல்கலைக்கழகம் அமைந்துள்ளது கவனிக்கத்தக்கது. நந்தம்பாக்கம் பகுதிக்கு அகலமான பிரதான சாலைகள் இல்லை என்றாலும், அது நகரின் மையப்பகுதியில் அமைந்திருப்பதோடு விரைவில் மெட்ரோ ரயில் சேவையும் தொடங்கப்படவுள்ளது. பட்டினப்பாக்கம் பகுதியைப்பொருத்தவரை, அடையாறு மற்றும் மயிலாப்பூருக்கு அருகில் அமைந்துள்ளதால் அங்குப் போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இந்த 3 இடங்களில் மிகவும் பொருத்தமான ஒன்றை தேர்வு செய்து, இம்மாதத்தின் மத்தியில் தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us