AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழக காவல் துறை ரூ.212 கோடியில் நவீன மயமாக்குதல்.. ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள்.. முதல்வர் விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்!

Tamil Nadu Police Deaprtment Announcements : தமிழக காவல் துறைக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை முதல் அமைச்ச ர் ஜோசப் விஜய் அறிவித்துள்ளார். இதில், என்னென்ன அறிவிப்புகள் என்பதை இந்தப் பதிவில் சற்று விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

தமிழக காவல் துறை ரூ.212 கோடியில் நவீன மயமாக்குதல்.. ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள்.. முதல்வர் விஜய் வெளியிட்ட மாஸ் அறிவிப்புகள்!
தமிழக காவல் துறைக்கான அறிவிப்புகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 03 Sep 2026 16:52 PM IST

தமிழக சட்டப்பேரவையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை ( செப்டம்பர் 3- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், முதல் -அமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதில்,

மேலும் படிக்க: புனித ஜார்ஜ் கோட்டைக்கு ‘குட்-பை’.. ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!!

  • ரூ.212 கோடி மதிப்பீட்டில் காவல்துறை நவீன மயமாக்கப்படும்.
  • அடுத்த 5 ஆண்டுகளில் 29,108 காவலர் பணியிடங்கள் படிப்படியாக உருவாக்கப்படும்.
  • நிகழாண்டு 5 ஆயிரம் பெண் காவலர்கள் உள்பட 10 ஆயிரம் காவலர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
  • செயற்கை நுண்ணறிவு, நிகழ் நேர கண்காணிப்பு அமைப்பு, நவீன டிஜிட்டல் தடயவியல், நவீன தகவல் தொடர்பு மற்றும் கட்டுப்பாட்டு மையங்களை உருவாக்குதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.
  • காவல்துறையில் பணியின் போது துணிச்சலுடன் பணிபுரிந்து உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு இழப்பீடாக ரூ. 1 கோடி வழங்கப்படும்.
  • வண்டலூர் அருகே அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் உயர் பயிற்சி மையத்தில் உள் விளையாட்டு வெளிப்புற அரங்கம் மற்றும் விளையாட்டு வசதிகள் ரூ.23 கோடியில் அமைக்கப்படும்.

ரூ. 200 கோடியில் காவல் துறைக்கு புதிய வாகனங்கள்

  • பணி காலத்தின் போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகை ரூ. 20 லட்சத்தில் இருந்து ரூ. 30 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
  • சேலம் மற்றும் விழுப்புரம் வட்டார தடைய அறிவியல் ஆய்வகத்தில் புதிய மரபணு ஆய்வு பிரிவுகள் சுமார் ரூ. 14 கோடி செலவில் நிறுவப்படும்.
  • காவல் துறையின் செயல் திறனை மேம்படுத்துவதற்காக ரூ. 200 கோடி செலவில் புதிய வாகனங்கள் வாங்கப்பட உள்ளது.
  • தாம்பரம் காவல் ஆணையரக எல்லைக்கு உட்பட்ட சட்டம்- ஒழுங்கு காவல் மாவட்டங்கள் மற்றும் சரணங்களை மறுசீரமைப்பு செய்து புதிதாக கிளாம்பாக்கம் உருவாக்கப்படும்.
  • கூடுவாஞ்சேரி சரக்கத்தை 2- ஆக பிரித்து புதிதாக கிளாம்பாக்கம் காவல் சரகம் உருவாக்கப்படும்.

தென்காசி மாவட்டத்தில் புதிய காவல் நிலையம்

  • ஆவடி காவல் மாவட்டம் பிரிக்கப்பட்டு புதிதாக பூந்தமல்லி காவல் மாவட்டம் மற்றும் பூந்தமல்லி காவல் சரகம் பிரிக்கப்பட்டு திருமழிசை காவல் சரகம் உருவாக்கப்படும்.
  • காவல் நிலையங்கள் மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளின் தூய்மை பணிகள் வெளி முகமை ஆண்டுக்கு ரூ. 60 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலைய கட்டடம் ரூ.1.95 கோடியில் கட்டப்படும்.
  • தென்காசி மாவட்டம், அய்யாபுரத்தில் புதிய ஊரக காவல் நிலைய கட்டடம் ரூ. 2.14 கோடியில் கட்டப்படும்.
  • தென்காசி மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நிர்வாக கட்டிடம், ஆயுத கிடங்கு, காவலர்கள் தங்குமிடம், வாகனங்களுக்கான கொட்டகை, பயிற்சி காவலர் உணவகம் மற்றும் கேண்டின் ரூ. 37.30 கோடியில் புதிதாக கட்டப்படும்.

மேலும் படிக்க: “யாரும் ஓடிப் போகக் கூடாது.. திங்கட்கிழமை பதில் சொல்றேன்!”.. உதயநிதிக்கு சவால் விடுத்த முதல்வர் விஜய்!!

Follow Us