AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தீயணைப்பு துறையினருக்கு ரூ. 80 கோடியில் புதிய குடியிருப்புகள்.. படித்தொகை உயர்வு.. அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்த முதல்வர் விஜய்!

Fire And Rescue Services Department Announcements: : தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகளை தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்தார். அவர் என்னென்ன அறிவிப்புகளை வெளியிட்டார் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தீயணைப்பு துறையினருக்கு ரூ. 80 கோடியில் புதிய குடியிருப்புகள்.. படித்தொகை உயர்வு.. அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்த முதல்வர் விஜய்!
தீயணைப்பு துறை அறிவிப்புகள்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 03 Sep 2026 16:21 PM IST

தமிழக சட்டப்பேரவையில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 3- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதில், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள் விவரம்:

மேலும் படிக்க: “116 நாளில் ரிவர்ஸ் கியரில் தமிழ்நாடு”.. கர்ஜித்து கேள்வி கேட்ட உதயநிதி.. கொந்தளித்த அமைச்சர் ஆனந்த்!!

  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் பயிற்சி கழகத்தின் 2- ஆம் கட்ட பணிகள் ரூ. 50 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
  • ரூ. 16 கோடியில் 6 இடங்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் அமைக்கப்படும்.
  • ரூ. 4.59 கோடியில் 3 சிப்காட் தொழில் பூங்காக்களில் புதிய தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்கள் அமைக்கப்படும்.
  • ரூ. 80 கோடி மதிப்பீட்டில் 10 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு 131 புதிய குடியிருப்புகள் கட்டப்படும்.
  • ரூ. 17.50 கோடி மதிப்பீட்டில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் பயன்பாட்டுக்காக புதிதாக 50 விரைவு மீட்பு உறுதிகள் வழங்கப்படும்.
  • ரூ. 65.90 கோடி செலவில் 15 இடங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையங்களுக்கு புதிய கட்டடங்கள் கட்டப்படும்.

வான்நோக்கி உயரும் ஏணிகள்

  • ரூ. 60 கோடி செலவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் பயன்பாட்டுக்காக புதிதாக 2 வான் நோக்கி உயரும் ஏணி கொண்ட ஊர்திகள் வழங்கப்படும்.
  • ரூ. 60 கோடியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் பயன்பாட்டுக்காக 50 நீர்தாங்கி வண்டிகள் வழங்கப்படும்.
  • ரூ. 80 லட்சம் செலவில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் முதல் கட்டமாக 2 ஸ்கூபா டிைவிங் குழுக்கள் உருவாக்கப்பட உள்ளன.
  • ரூ. 1 கோடி செலவில் 3 தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் ஸ்கூபா வீரர்கள் பயன்பாட்டுக்காக 50 ஸ்கூபா உடைகள் வழங்கப்படும்.
  • தமிழக முதல்வர் தீயணைப்பு பணிகள் பதக்கம் பொங்கல் திருநாள் அன்று வழங்கப்படும் எண்ணிக்கை மற்றும் படித்தொகை உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் உள்ள ஃபயர் மேன் ( FIRE MAN) என்ற பதவியின் பெயர் ஃபயர் ஃபைட்டர் ( FIRE FIGHTER) என மாற்றி அழைக்கப்படும். ஆகிய அறிவிப்புகளை முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்தார்.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் பயன்பாட்டில் உள்ள மூச்சு கருவிகளுக்கு மறு நிரப்பம் செய்ய 5 காற்று பிடிக்கும் கருவிகள் ரூ. 65 லட்சம் செலவில் வழங்கப்படும்.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் புதிதாக பெண் தீயணைப்பு வீரர்கள் பணி அமர்த்தப்படுவார்கள்.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை பணியாளர்களுக்கான சீருடை படி காவல்துறை பணியாளர்களுக்கு இணையாக ரூ. 3.77 கோடி செலவில் வழங்கப்படும்.
  • தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் புதிதாக ஆய்வு குழு பிரிவு உருவாக்கப்படும். இதற்காக முதல் கட்டமாக 10 குழுக்கள் ரூ. 3.21 கோடி செலவில் உருவாக்கப்பட உள்ளது.

மேலும் படிக்க: “யாரும் ஓடிப் போகக் கூடாது.. திங்கட்கிழமை பதில் சொல்றேன்!”.. உதயநிதிக்கு சவால் விடுத்த முதல்வர் விஜய்!!

Follow Us