செய்வினையால் வந்த வினை.. கிருஷ்ணகிரியில் மூதாட்டியை திட்டமிட்டு தீர்த்துக்கட்டிய சகோதரிகள்.. போலீசாரிடம் பகீர் வாக்குமூலம்!
Mayiladumparai Women Murder : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செய்வினை வைத்ததால் மூதாட்டியை அவரது அக்காள் மகள்கள் கயிறால் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில், அக்காள், தங்கையை தனிப்படை போலீசார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பொன் நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி ஜக்கம்மாள் ( 70 வயது). இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கடமலைக்குண்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், மூதாட்டியின் கழுத்தில் கயிற்றால் நெரிக்கப்பட்ட தடம் இருந்தது. இதனால், அவர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் 2 தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை தீவிர படுத்தப்பட்டது. இதில், ஜக்கம்மாளின் அக்காள் மகள்களான ஜங்கல்பட்டியை சேர்ந்த அய்யம்மாள் ( 42 வயது), அவரது தங்கை நாகராணி ( 38 வயது) ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். இதில், மூதாட்டியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
மாந்திரீகம் செய்ததால் வந்த வினை
இந்த கொலை சம்பவம் தொடர்பாக சகோதரிகள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலம் பின்வருமாறு: ஜக்கம்மாளுக்கும், அய்யம்மாள் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதில், அய்யம்மாள் குடும்பத்துக்கு மூதாட்டி ஜக்கம்மாள் மாந்திரீகம் செய்ததாக தெரிகிறது. இதன் காரணமாக, அவரின் குடும்பத்தினருக்கு பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டதாகவும், பல்வேறு சோதனைகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதில், பெரும் பாதிப்பை சந்தித்த அய்யம்மாளின் குடும்பம் பெரும் பின்னடைவுக்கு வந்ததாக அக்காள், தங்கை இருவரும் எண்ணி உள்ளனர்.
மேலும் படிக்க: 1 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பி.. அரசு மருத்துவர்கள் செய்த நுட்பமான ஆபரேசன்.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!




மூதாட்டியை திட்டமிட்டு தீர்த்து கட்டிய அக்காள்-தங்கை
இதன் காரணமாக, மூத்தாட்டி ஜக்கம்மாள் மீது இருவருக்கும் கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரை தீர்த்து கட்டுவதற்கு அக்காள் மற்றும் தங்கை திட்டமிட்டுள்ளனர். அதன்படி, சம்பவத்தன்று இருவரும் ஜக்கம்மாளின் வீட்டுக்கு சென்று சாதாரணமாக பேசுவது போல அவரிடம் பேச்சு கொடுத்துள்ளனர். அவரும் பதிலுக்கு பேச்சு கொடுத்துள்ளார். பின்னர், மூதாட்டி ஜக்கம்மாள் சற்று அயர்ந்த நிலையில், அவரை பின்பக்கமாக சென்று அய்யம்மாள் மற்றும் நாகராணி ஆகியோர் கயிற்றால் கழுத்தை நெரித்து துடிக்க துடிக்க கொலை செய்துள்ளனர்.
தனிப்படை போலீசாரின் தேடுதல் வேட்டை
பின்னர், இருவரும் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். ஆனால், போலீசார் எங்களை கைது செய்து விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். முன்னதாக ஜக்கம்மாளின் உறவினர்களிடம் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், அவரது வீட்டுக்கு அண்மையில் வந்து சென்றவர்கள் மற்றும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து போலீசார் விசாரித்த நிலையில், உறவினரே அந்த மூதாட்டியை கொலை செய்தது போலீசாரின் அதிரடி விசாரணையில் வெளிவந்தது அந்த பகுதியில் பெரும் பாபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தமிழகத்தில் கருத்தரித்தல் மையங்களில் ஐடி ரெய்டு.. என்ன காரணம்.. பெரும் பரபரப்பு!