AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்

Actor Legend Saravanans next project update here | தொழிலதிபராக மக்களிடையே பிரபலமாகி தற்போது நாயகனாக வலம் வருபவர் லெஜெண்ட் சரவணன். இவரது நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள படம் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.

லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கும் சிவகார்த்திகேயன் பட இயக்குநர்? வைரலாகும் தகவல்
லெஜண்ட் சரவணன்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 02 Sep 2026 17:35 PM IST

தமிழ் நாட்டில் மக்களிடையே அதிக பரிச்சையமான தொழிலதிபர்கள் குடும்பர் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸ் குடும்பம் தான். இவர்களின் குடும்பத்தில் இருப்பவர்களே சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்தினம் என பல பெயர்களில் துணிக்கடையில் இருந்து நகைக்கடை வரை தமிழ் நாட்டில் பல்வேறு இடங்களில் வைத்துள்ளனர். இந்த நிலையில் லெஜெண்ட் சரவணன் என்று தமிழக மக்களால் அடையாளப்படுத்தப்படுபவர்தான் சரவணன் அருள். இவர் தற்போது தமிழ் சினிமாவில் நாயகனாகவும் வலம் வருகிறார். அதன்படி இவர் தமிழ் சினிமாவில் தி லெஜெண்ட் என்ற படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகம் ஆனார். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே மக்களிடையே வரவேற்பைப் பெற்றார். அதனைத் தொடர்ந்து இவர் அடுத்தடுத்தப் படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.

அதன்படி நடிகர் லெஜெண்ட் சரவணன் நடிப்பில் இரண்டாவதாக தமிழ் சினிமாவில் லீடர் என்ற படம் திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. மேலும் முதல் படத்தைப் போல இல்லாமல் இந்த லீடர் படத்தில் லெஜெண்ட் சரவணனி நடிப்பை மக்கள் வெகுவாகப் பாராட்டினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவரது நடிப்பில் உருவாக உள்ள மூன்றாவது படம் குறித்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கும் பிரபல இயக்ககுநர்?

மான் கராத்தே, கெத்து மற்றும் ரெட்டத்தலை ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் திருக்குமரன், லெஜண்ட் சரவணனின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை முதலில் துரை செந்தில்குமார் இயக்குவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. முன்-தயாரிப்பு மற்றும் திரைக்கதை பணிகள் நடைபெற்ற நிலையில், படத்தின் பட்ஜெட் மிக அதிகமாக இருப்பதற்கு கலை இயக்குநரே முக்கிய காரணம் என்று சரவணன் கருதினார். எனவே, கலை இயக்குநரை மாற்றும்படி அவர் கேட்டுக்கொண்டார். ஆனால், துரை செந்தில்குமார் தனது கலை இயக்குநரைத் தனது படக்குழுவின் ஒரு அங்கமாகவே கருதுவதால், இத்திட்டத்திலிருந்து சுமூகமாக விலகிக்கொண்டார் (தற்போது அவர் விஷால் நடிக்கும் படத்தை இயக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்). இதற்கிடையில், புதிய இயக்குநரைத் தேடி வந்த சரவணன், திருக்குமரனின் கதைக்களம் மற்றும் கதையை விரும்பியதன் அடிப்படையில் அவரை இப்படத்தை இயக்க இறுதி செய்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.

Also Read… Suriya: நிஜ வாழ்க்கைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.. சர்தார் 2 படம் குறித்து சொன்ன சூர்யா!

இணையத்தில் வைரலாகும் எக்ஸ் தள பதிவு:

Also Read… Raashii Khanna: என் இயக்குநர் மிகவும் கண்டிப்பானவர்.. தர்மன் பட ஷூட்டிங் குறித்து ராஷி கன்னா!

Follow Us