பெத்தலேகம் குடும்ப யூனிட் படம் பாத்துட்டீங்களா? அப்போ மிஸ் பண்ணாம இந்த சோல்மேட்ஸ் ஒரு சாத்துகுடி பிரணயம் ஷார்ட் ஃபிலிம் பாருங்க
Soulmates Oru Saathukkudi Pranayam | மலையாள சினிமாவில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வரும் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தில் இருந்து ஒரு குறும்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அது தற்போது ரசிகர்களிடையே அதிக அளவில் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மலையாள சினிமாவில் கடந்த 2010-ம் ஆண்டு தனது நடிப்பு பயணத்தை தொடங்கிய நடிகர் நிவின் பாலி தொடர்ந்து 15 ஆண்டுகளுக்கு மேலாக பல ஹிட் படங்களை கொடுத்து தற்போது உச்ச நடிகராக வலம் வருகிறார். இந்த நிலையில் இந்த 2026-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்து நடிகர் நிவின் பாலி நடிப்பில் இதுவரை அடுத்தடுத்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் நிவின் பாலி நடிப்பில் முன்னதாக வெளியான பேபி கேர்ள் மற்றும் பிரதிச்சாயா ஆகிய இரண்டு படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று உளளது. அதே போல தற்போது நடிகர் நிவின் பாலி நடிப்பில் மூன்றாவதாக இந்த 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான படம் பெத்தலேகம் குடும்ப யூனிட். இந்தப் படம் திரையரங்குகளில் ரசிகர்களிடையே விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.
மலையாள சினிமாவில் இந்தப் படம் உருவாகி இருந்தாலும் தென்னிந்திய மொழிகளில் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருவதால் தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. அதன்படி டப்பிங் வெர்ஷன் வருகின்ர 04-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு வெளியாக உள்ளது.




இணையத்தில் வைரலாகும் சோல்மேட்ஸ் ஒரு சாத்துகுடி பிரணயம் ஷார்ட் ஃபிலிம்:
இந்த சோல்மேட்ஸ் ஒரு சாத்துகுடி பிரணயம் ஷார்ட் ஃபிலிம் மற்றவர்களுக்கு புரியுமோ இல்லையோ பெத்தலேகம் குடும்ப யூனிட் படம் பார்த்தவர்களுக்கு புரியும். இந்தப் படத்தில் நடிகர் நிவின் பாலி ஜஸ்டின் டேவிஸ் என்ற கதாபபத்திரத்தில் நடித்து இருந்த நிலையில் அவரது தம்பி கதாபபத்திரமான ஜோயல் டேவிஸ் என்ற பாத்திரத்தில் நடிகர் சங்கீத் பிரதாப் நடித்து இருந்தார். இந்த கதாப்பாத்திரம் படத்தில் ஒரு ஷார்ட் ஃபிலிம் எடுத்து இருப்பார். அந்தப் படம் தான் சோல்மேட்ஸ். அதனை அவரது அண்ணனான ஜஸ்டின் டேவிஸ் தயாரித்து இருந்தார். இந்த ஷார்ட்ஃபிலிமினை தற்போது முழுவதுமாக படக்குழு வெளியிட்டுள்ளது. அதனை தான் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர்.
இந்த ஷார்ட் ஃபிலிமை பெத்தலேகம் குடும்ப யூனிட் படத்தைப் பார்க்காதவர்கள் பார்த்தால் கிரிஞ்ச் என்று தோன்றும். ஆனால் படம் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது ஒரு அற்புதம் எனறு. அதன் காரணமாகவே ரசிகர்கள் இந்த ஷார்ட் ஃபிலிமை கொண்டாடி வருகின்றனர். இது தற்போது யூடியூபில் 5 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read… GV Prakash: இம்மார்ட்டல் பட டைட்டில் முதலில் அதுதான்.. ஓபனாக பேசிய ஜி.வி.பிரகாஷ்!
பெத்தலேக குடும்ப யூனிட் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
🙏🙏🙏⚡⚡⚡
Moreli Pictures Presents “SOULMATES , ORU SAATHUKUDI PRANAYAM” ✨
Now Streaming On Bhavana Studios YouTube Channel 🎥
Watch ▶️ https://t.co/MruHzUZ2QN
Written and Conceived by JOEL DAVIS
Produced by JUSTIN DAVIS#Soulmates #SaathukudiPranayam… pic.twitter.com/9RQz5dBnlO— Bhavana Studios (@BhavanaStudios) August 31, 2026
Also Read… தெலுங்கு சினிமாவின் உச்சம்.. இந்த சிறுவன் எந்த ஹீரோ தெரியுமா?