தெலுங்கு சினிமாவின் உச்சம்.. இந்த சிறுவன் எந்த ஹீரோ தெரியுமா?
Telugu Actor childhood photo: நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சிரியவயது புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் ஈர்க்கப்பட்டுவருகிறது. அந்த விதத்தில் இந்த பிளாக் அண்ட் வைட் போட்டோவில் இருக்கும் சிறுவன் யார் தெரியுமா?. இவர் தெலுங்கு சினிமாவில் சிறந்த நடிகர்களில், ஒருவர் தமிழிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
இணையதளங்களின் வளர்ச்சியிலிருந்து, சினிமாவின் மீதும் மற்றும் நடிகர்கள் மீது ரசிகர்களுக்கு அதிக இணைப்புகள் இருந்துவருகிறது. அந்த விதத்தில், தங்களுக்கு பிடித்த நடிகரை சிறுவயது புகைப்படங்கள் மற்றும் அடையாளம் தெரியாத போட்டோக்கள் இணையத்தில் வைரலாகுவது வழக்கமே. அந்த வகையில், மேலே உள்ள போட்டோவில் இருக்கும் சிறுவன் யாருனு தெரியுமா?. இவர் சினிமாவில் ஆரம்பகாலகட்டங்களில் படங்களில் உதவி இயக்குநராகவும், படங்களில் துணை வேடங்களிலும் நடித்துவந்தவர். கடந்த 2008ம் ஆண்டில் தெலுங்கு (Telugu Cinema) இயக்குநர் மோகன் கிருஷ்ணா (Mohan Krishna) இயக்கத்தில் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பின், தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாகவே நடிக்க தொடங்கிவிட்டார். தமிழில் (Tamil Cinema) இவருக்கு முதல் வாய்ப்பை கொடுத்த இயக்குநர் அஞ்சனா அலிகான் (Anjana Ali Khan). இவரின் இயக்கத்தில் கடந்த 2011ம் ஆண்டில் தமிழில் நுழைந்தார்.
நேரடியாக தமிழில் இவர் பல படங்களில் நடித்திருக்கினார். மேலும் கேமியோ வேடங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தெலுங்கில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். இவரை ரசிகர்கள் “நேச்சுரல் ஸ்டார்” (Natural Star) என்று அழைக்கிறார்கள். என்பது யார் என தெரிந்திருக்கும், அட நடிகர் நானிதான் (Nani).




இதையும் படிங்க: அந்த காட்சிகளுக்கு நான் நோ சொன்னதே இல்ல – சமந்தா!
நடிகர் நானியின் இன்ஸ்டாகிராம் போட்டோஷூட் பதிவு:
View this post on Instagram
சினிமாவில் நடிகர் நானி முன்னேறிய பாதை:
தெலுங்கு சினிமாவில் ரசிகர்கள் கொண்டாடவும் நாயகனாக இருந்துவர்பவர் நானி. இவர் சினிமாவில் ஆரம்பத்தில் ஷூட்டிங்கில் உதவி இயக்குநராக பணியாற்றியவர். தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற படங்களிலும் பணியாற்றியுள்ளார். பின் நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட நானி, 2008ம் ஆண்டில் வெளியான ஆஷாட சம்மா என்ற படத்தின் மூலம் ஹீரோவாக நுழைந்தார். இதில் ரெட்டை வேடத்தில் நடித்திருந்தார். பின் ரைட், ஸ்னேஹிட்டுடா, ஆலா மொடலைந்தி போன்ற படங்களிலும் நடித்தார். இவருக்கு தமிழில் முதல் அறிமுக படமாக அமைந்தது வெப்பம். இதில் நித்யா மேனனுடன் இணைந்து நடித்திருந்தார்.
இதையும் படிங்க: சிவராஜ்குமார் – அபிஷன் ஜீவிந்த் கூட்டணி பட ஷூட்டிங் நிறைவு – வீடியோவை வெளியிட்ட படக்குழு!
இதன் பிறகு நான் ஈ மற்றும் ஆஹா கல்யாணம் போன்ற படங்களிலும் நேரடியாக தமிழில் நடித்தார். தற்போது தெலுங்கு சினிமாவில் படங்களில் நடிப்பதை தீவிரமாக செய்துவருகிறார். இறுதியாக ஹிட் 3 என்ற படத்தில் நடித்து ஹிட் கொடுத்த நிலையில், தற்போது இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா இயக்கத்தில் தி பாரடைஸ் என்ற படத்தில் ஆக்ஷன் நாயகனாக நடித்துள்ளார். இப்படம் 2026ம் ஆண்டு செப்டம்பர் 24ம் தேதியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.