நிவின் பாலியின் பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை ரசிகர்கள் கொண்டாட என்ன காரணம்?
Bethlehem Kudumba Unit Movie | மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் நிவின் பாலி நடிப்பில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான படம் பெத்தலேகம் குடும்ப யூனிட். இந்தப் படத்தினை ரசிகர்கள் கொண்டாட என்ன காரணம் என்று பார்க்கலாம்.
மலையாள சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வருபவர் நடிகர் நிவின் பாலி. இவர் தொடர்ந்து மலையாள சினிமாவில் படங்களில் நடித்து வந்தாலும் அவ்வபோது மற்ற தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். மேலும் நடிகர் நிவின் பாலி நடிப்பில் மலையாள சினிமாவில் வெளியாகும் படங்கள் தொடர்ந்து தென்னிந்திய மொழிகளில் உள்ள ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. நடிகர் நிவின் பாலிக்கு மலையாள சினிமாவில் எந்த அளவிற்கு ரசிகர்கள் பட்டாளம் உள்ளதோ அதே போல தமிழ் சினிமாவில் அதிகப்படியான ரசிகர்கள் பட்டாளம் உள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் காரணமாகவே நடிகர் நிவின் பாலி நடிப்பில் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான பெத்தலேக குடும்ப யூனிட் படம் தென்னிந்திய மொழி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது.
இதன் காரணமாகவே பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் டப் செய்து வெளியிடும் பணியைப் படக்குழு விறுவிறுப்பாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்த பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை இயக்குநர் கிரிஷ் ஏடி எழுதி இயக்கி உள்ள நிலையில் நடிகை மமிதா பைஜூ இந்தப் படத்தில் நாயகியாக நடித்து உள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர்கள் சங்கீத் பிரதாப், ரோஷன் ஷானவாஸ், சுரேஷ் கிருஷ்ணா, ஷியாம் மோகன், ஸ்ரீந்தா, வினய் கோட்டை, மீனாட்சி ரவீந்திரன், பிரியா எஸ் பாபு, ஸ்ரீரெஞ்சினி, பிந்து பணிக்கர், பார்வதி அய்யப்பதாஸ், ஷமீர் கான், வினீத் விஸ்வம், ஜெயசங்கர் கரிமுட்டம், அபிராம், ஜாசர் கிளிக்குகள், வெட்டுகிளி பிரகாஷ், மஞ்சுஸ்ரீ மற்றும் தங்கம் மோகன் என பலர் இந்தப் படத்தில் நடித்து உள்ளனர்.
பெத்தலேக குடும்ப யூனிட் படத்தை கொண்டாடும் ரசிகர்கள்:
அயர்லாந்தில் வேலைக்கு சென்றுவிட்டு சுமார் 1.5 அரை ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கேரளாவிற்கு திரும்புகிறார் நடிகை மமிதா பைஜூ. அவர் திரும்பும் போதே தனது வாழ்க்கையில் முன்பு நடந்த அனைத்தையும் நினைத்துக்கொண்டே வருகிறார். அப்போது தனது பக்கத்து வீட்டில் இருக்கும் ஜஸ்டினை (நிவின் பாலி) காதல் செய்ததை நினைத்துக்கொண்டே வருகிறார்.




குடும்ப சூழல் காரணமாக சொந்த ஊரில் இருந்து நிவின் பாலியின் வீட்டிற்கு அருகே குடுவருகிறார்கள் மமிதாவின் குடும்பத்தினர். அப்போது நிவின் மீது மமிதாவிற்கு காதல் வருகின்றது. ஆனால் வயது வித்யாசம் காரணமாக நிவின் முதலில் அந்த காதலை ஏற்க மறுக்கிறார். அதனைத் தொடர்ந்து மமிதாவை பிடித்துபோக அவரும் காதலிக்கிறார்.
Also Read… தங்கல், கனா மாதிரி மண்டாட்டி படத்தையும் சீனாவில் ரிலீஸ் செய்ய வேண்டும் – நடிகர் சத்யராஜ்
இந்த விசயம் மமிதாவின் வீட்டிற்கு தெரியவந்து பெரிய பிரச்சனையாகிறது. அப்போது இவர்கள் இருவரும் பிரியும் சூழல் ஏற்படுகின்றது. இறுதியில் இவர்கள் இருவரும் இணைந்தார்களா இல்லையா என்பதே படத்தின் கதை. இந்தப் படம் 90ஸ் மற்றும் 2கே கிட்ஸ்களிடையே பல விசங்களை நாஸ்டாலஜியாக நினைவுபடுத்துகிறது. இதன் காரணமாகவே இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read… 2 படங்களில் விஜய் சாருடன் பணியாற்றும் வாய்ப்பு தவறியது – ஜிவி பிரகாஷ் குமார் ஓபன் டாக்