பிக் பாஸ் சீன் 10 கலந்துகொள்ளும் பெண் போட்டியாளர்கள் இவர்களா? லிஸ்ட் இதோ!
BB 10 Tamil Female Contestants: தமிழில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் மிகவும் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகிவரும் ரியாலிட்டி ஷோதான் பிக் பாஸ். 2026ம் ஆண்டிற்கான பிக் பாஸ் சீசன் 10 விரைவில் தொடங்கவுள்ள நிலையில், இதில் பங்குபெறும் பெண் போட்டியாளர்கள் யார் என்பது குறித்து விவரமாக பார்க்கலாம்.
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றாக இருந்துவருவதுதான் பிக் பாஸ் (Bigg Boss). இந்த நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகிவருகிறது. இந்த நிகழ்ச்சியானது தமிழில் கடந்த 2017ம் ஆண்டு முதல் தமிழில் ஒளிபரப்பாக தொடங்கியது. இந்த பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியை ஆரம்பத்திலிருந்து உலகநாயகன் கமல்ஹாசன் (KamalHaasan) தொகுத்துவந்த நிலையில், சில காரணங்களால் அவர் விலகிவிட்டார். பின் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி முதல் தற்போது விஜய் சேதுபதி தொகுப்பாளராக தொகுத்து வருகிறார். இறுதியாக வெளியான பிக் பாஸ் சீசன் 9 வெற்றியாளராக திவ்யா கணேசன் வெற்றியாளரானார்.
அதை தொடர்ந்து, பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10) நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக களமிறங்கும் பெண்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அது குறித்து விவரமாக பார்க்கலாம்.




இதையும் படிங்க: ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 மற்றும் தனுஷின் ஓம் பட ரிலீஸில் பிரச்சனை? இணையத்தில் வைரலாகும் தகவல்!
பிக் பாஸ் சீசன் 10ல் இணையும் பெண் போட்டியாளர்கள் லிஸ்ட்:
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோஸ் சீரியல் நடிகை ஹேமா ராஜகுமார், ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சீரியல் நடிகை அக்ஷதா, கனா காணும் காலங்கள் சீசன் 2 நடிகை பானுமதி, சீரியல் நடிகை ஆலியா மானசா மற்றும் மகாநதி சீரியல் நடிகை பிரியா உள்ளிட்ட பல்வேறு பெண் பிரபலங்கள் கலந்துகொள்வதாக கூறப்பட்டுள்ளது. இதில் யார் யார் பங்குபெறுவார்கள் என இன்னும் உறுதியாகவில்லை.
இதையும் படிங்க: மகேஷ் பாபுவிற்கு சுதா கொங்கராவின் கதை பிடித்தும் நடிக்க முடியல – ஜிவி பிரகாஷ் குமார்
பிக் பாஸ் சீசன் 10 குறித்து வெளியான புரோமோ பதிவு:
நீங்க எதிர்பாக்குற எல்லாமே இங்க இருக்கு!! 🤩🔥
Bigg Boss Tamil Season 10 | Grand Launch – செப்டம்பர் 6 மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason10 #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #VijaySethupathi #BiggBossTamil #BB10… pic.twitter.com/MTXc65BZJW
— Vijay Television (@vijaytelevision) August 29, 2026
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி எப்போது தொடக்கம்:
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியானது வரும் 2026ம் ஆண்டு செப்டம்பர் 06-ம் தேதியில், மாலை 6 மணியளவில் தொடங்குகிறது. இந்த நிகழ்ச்சியானது தமிழில் மிக பிரமாண்டமாக தொடங்கவுள்ள நிலையில், இதில் பிக் பாஸ் தி காமன் மேன் நிகழ்ச்சியிலிருந்து மொத்தமாக 3 போட்டியாளர்கள் பங்குபெறுகிறார்களாம். மேலும் இத்துடன் மொத்தம் 17 போட்டியாளர்கள் கலந்துகொள்கிறார்கள், ஆக மொத்தத்தில் மொத்தம் 23 போட்டியாளர்கள் பங்குபெறுவதாக கூறப்படுகிறது.