AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 மற்றும் தனுஷின் ஓம் பட ரிலீஸில் பிரச்சனை? இணையத்தில் வைரலாகும் தகவல்!

Jailer 2 vs Om: சினிமாவில் சிறந்த நடிகராக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரின் நடிப்பில் வெளியாக காத்திருக்கும் புது படம்தான் ஜெயிலர் 2. இப்படம் 2026ம் அக்டோபரில் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், அதனுடன் தனுஷின் ஓம் படம் வெளியாகும் என கூறப்பட்டது. தற்போது இந்த இரு படங்களின் ரிலீஸில் சிக்கல் வந்துள்ளதாம்.

ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 மற்றும் தனுஷின் ஓம் பட ரிலீஸில் பிரச்சனை? இணையத்தில் வைரலாகும் தகவல்!
ஜெயிலர் 2 மற்றும் ஓம் திரைப்படம்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 30 Aug 2026 17:20 PM IST

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் (Superstar Rajinikanth) நடிப்பில் 172வது திரைப்படமாக மிக பிரம்மாண்டமாக தயாராகியுள்ளதுதான் ஜெயிலர் 2 (Jailer 2). இப்படத்தின் ஷூட்டிங் முழுமையாக நிறைவடைந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் உள்ளது. இந்த திரைப்படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் (Nelson Dilipkumar) இயக்க, சன் பிக்ச்சர்ஸ் நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளது. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முன்னணி வேடத்தில் நடிக்க, அவருடன் பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர். அனிருத்தின் இசையில், சமீபத்தில் இப்படத்திலிருந்து “அலா பொலேலோ” என்ற முதல் பாடலானாது வெளியாகியிருந்தது. இந்த பாடல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இப்படத்திற்கு மறுநாள் தனுஷின் ஓம் படமும் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த இரு படங்களின் ரிலீஸிற்கும் சிக்கல் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: கார்த்தியின் சர்தார் 2 பட ஆடியோ லான்ச் எப்போது தெரியுமா? – வீடியோவுடன் வெளியான அறிவிப்பு!

அக்டோபரில் வெளியாகாதா ஜெயிலர் 2 மற்றும் ஓம் திரைப்படம்:

இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படமானது சிறப்பாக உருவாகியுள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முழுமையாக நிறைவடைந்திருக்கும் நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக உள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பே தனுஷின் ஓம் படம் 2026ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதியில் வெளியாகும் என கூறப்பட்டது.

இதையும் படிங்க: மகேஷ் பாபுவிற்கு சுதா கொங்கராவின் கதை பிடித்தும் நடிக்க முடியல – ஜிவி பிரகாஷ் குமார்

இந்நிலையில் தனுஷின் ஓம் படத்தின் ஷூட்டிங் தற்போதுவரை நிறைவடையவில்லை, அதனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் ஜெயிலர் 2 படத்தின் எடிட்டிங் பணிகளும் இன்னும் நிறுவடையவில்லை, மேலும் சில காரணங்களால் இதன் ரிலீஸ் தேதி மாற்றப்படுவதாக கூறப்படுகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

ஓம் மற்றும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஓத்த்திவைப்பு குறித்து வைரலாகும் பதிவு:

தனுஷின் ஓம் திரைப்படமானது பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இப்படம் ஜெயிலர் 2 படத்தின் ரிலீசிற்கு, மறுநாள் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், வசூல் பாதிக்கப்படும் என்ற காரணத்தினாலும் இதன் ரிலீஸ் தேதியை மாற்றுவதற்கு படக்குழு பேச்சுவார்த்தைகளில் இருக்கிறார்களாம். இந்த தகவல்கள் உண்மை என்றால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us