AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

இது புதுசா இருக்கே… ஐ அம் கேம் படத்திற்கு புரமோஷ்னல் பாடலை வெளியிட்ட படக்குழு

High Stakes Promotion Song For I Am Game Movie | நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஐ அம் கேம். இந்தப் படத்திற்காக புரமோஷ்னல் வீடியோவை படக்குழு தற்போது வெளியிட்டு உள்ளது.

இது புதுசா இருக்கே… ஐ அம் கேம் படத்திற்கு புரமோஷ்னல் பாடலை வெளியிட்ட படக்குழு
ஐ அம் கேம்Image Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 31 Aug 2026 21:56 PM IST

பான் இந்திய மொழிகளில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் துல்கர் சல்மான். இவரது நடிப்பில் வெளியாகும் படங்கள் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றது. தொடர்ந்து சினிமாவில் நாயகனாக மட்டும் இன்றி தயாரிப்பாளராகவும் பல சிறந்த படங்களை தயாரித்து வருகிறார் துல்கர் சல்மான். மேலும் இவரது நடிப்பில் கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் அடுத்தடுத்து மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு என மூன்று மொழிகளில் இருந்து மூன்று படங்கள் திரையரங்குகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது. அந்த மூன்று படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து இந்த 2026-ம் ஆண்டும் நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன்படி முதலாவதாக தற்போது மலையாள சினிமாவில் உருவாகி உள்ள ஐ அம் கேம் படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மேலும் இந்தப் படத்தில் நடிகர் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிகை கயாடு லோஹர் நடித்துள்ள நிலையில் இவர்களுடன் இணைந்து நடிகர்கள் பலர் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளனர். இந்தப் படத்தின் ரிலீஸ் முன்னதாக அறிவிக்கப்பட்டு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது படம் வருகின்ற 03-ம் தேதி செப்டம்பர் மாதம் 2026-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஐ அம் கேம் படத்திற்கு புரமோஷ்னல் பாடலை வெளியிட்ட படக்குழு:

இந்த ஐ அம் கேம் படத்தை இயக்குநர் நஹாஸ் ஹிதாயத் எழுதி இயக்கி உள்ளார். முன்னதாக இவரது இயக்கத்தில் வெளியான ஆர்டிஎக்ஸ் படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து தற்போது இந்த படமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். மேலும் இந்தப் படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் படக்குழு தற்போது புரமோஷனல் பாடலாக ஹை ஸ்டேக் என்ற பாடலைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… Amala Shaji: விக்ரம் பிரபு படத்தில் நடிகையாக அறிமுகமாகும் அமலா ஷாஜி..!

ஐ அம் கேம் படக்குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… இது நடக்கவே நடக்காது என்ற விஷயத்தை கூட அஜித் மற்றும் விஜய் சார் நடத்தி காட்டுவார்கள் – ஓபனாக பேசிய ஜி.வி. பிரகாஷ்!

Follow Us