AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

1 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பி.. அரசு மருத்துவர்கள் செய்த நுட்பமான ஆபரேசன்.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!

Small Iron Wire Stuck Child Throat : ஈரோடு மாவட்டத்தில் ஒரு வயது ஆண் குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த சிறிய இரும்பு கம்பியை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் நுட்பமான அறுவை சிகிச்சை மேற்கொண்டு பாதுகாப்பாக அகற்றி வெளியே எடுத்தனர்.

1 வயது குழந்தையின் தொண்டையில் சிக்கிய இரும்பு கம்பி.. அரசு மருத்துவர்கள் செய்த நுட்பமான ஆபரேசன்.. ஈரோட்டில் அதிர்ச்சி சம்பவம்!
குழந்தை தொண்டையில் சிக்கியிருந்த இரும்பு கம்பி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 02 Sep 2026 15:07 PM IST

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மற்றும் நிறுவனங்களில் ஏராளமான வெளி மாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இதில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதியும் தனது 1 வயது ஆண் குழந்தையுடன் தங்கி இருந்து வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், அந்த தம்பதியின் ஆண் குழந்தைக்கு திடீரென உடல் நல பாதிப்பு ஏற்பட்டது. அத்துடன், குழந்தை சாப்பிடாமல் அடிக்கடி வாந்தி எடுத்து வந்தது. இதனால், அச்சமடைந்த பெற்றோர் குழந்தையை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில், குழந்தைக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டும் என்று கூறினர்.

ஒரு வயது குழந்தையின் தொண்டையில் இரும்பு கம்பி

அதன்படி, குழந்தைக்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்ட நிலையில், அதில் குழந்தையின் தொண்டையில் ஒரு சிறிய கம்பி சிக்கி இருந்தது தெரிய வந்தது. இதை பார்த்து மருத்துவர்களும், பெற்றோரும் கடும் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து, அந்த குழந்தை ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குழந்தை அறுவை சிகிச்சை அரங்குக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவ குழுவினர் சுமார் 1 மணி நேரம் அறுவை சிகிச்சை மேற்கொண்டு, அந்த குழந்தையின் தொண்டை பகுதியில் சிக்கி இருந்து சிறிய வடிவிலான இரும்பு கம்பியை பத்திரமாக அகற்றி வெளியை எடுத்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் கருத்தரித்தல் மையங்களில் ஐடி ரெய்டு.. என்ன காரணம்.. பெரும் பரபரப்பு!

தீவிர சிகிச்சையில் குணமடைந்த குழந்தை

இதைத் தொடர்ந்து குழந்தைக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இதில், குழந்தை குணமடைந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். முன்னதாக, 1 வயது ஆண் குழந்தை விளையாடிய போது, எதிர்பாராத விதமாக சிறிய இரும்பு கம்பியை தெரியாமல் சாப்பிட்டதாக தெரிகிறது. இது குழந்தையின் தொண்டை பகுதிக்குள் சிக்கி இருந்த நிலையில், ஓரிரு நாட்களாக குழந்தை அவதி அடைந்து வந்தது. உணவும் சாப்பிடாமல் வாந்தி எடுத்து வந்த நிலையில், அவரது பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு மருத்துவர்கள் மேற்கொண்ட நுட்பமான சிகிச்சை

இதன் காரணமாக, கடந்த ஆகஸ்ட் 24- ஆம் தேதி ஈரோடு அரசு மருத்துவமனையில் குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு அரசு மருத்துவர் குழுவினர் மேற்கொண்ட நுட்பமான அறுவை சிகிச்சையில் குழந்தையின் தொண்டையில் சிக்கி இருந்த சிறிய இரும்பு கம்பி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதன் பின்னரே, அந்த குழந்தையின் பெற்றோர் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க: பட்டா பெயர் மாற்றத்துக்கு லஞ்சம்.. விஏஓவை லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைத்த விவசாயி.. திருப்பூரில் சம்பவம்!

Follow Us