தென்காசியில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய லைன்மேன்… பொறி வைத்து தூக்கிய ஊழல் தடுப்பு போலீஸ்!
Electricity Board Lineman Arrested : தென்காசி மாவட்டத்தில் ரூ. 5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்சார வாரியத்தின் லைன்மே னை மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .
தென்காசி மாவட்டம், சொக்கம்பட்டி அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியை சேர்ந்தவர் சுந்தரபாண்டியன். இவரது மகன் முருகேசன் ( 42 வயது). இவர், தனது தந்தை சுந்தரபாண்டியன் பெயரில் உள்ள 6.5 ஏக்கர் நிலத்தில் தென்னை மரங்கள் வைத்து விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலத்தில் விவசாயத்துக்காக இலவச மின் இணைப்பும் பெற்றுள்ளார். இந்த நிலையில், அந்த மின் இணைப்பில் 2 பேஸ் மற்றும் 3 பேஸ் மின்சாரம் மாறி மாறி வந்ததாக தெரிகிறது. இதன் காரணமாக சில நேரங்களில் முருகேசன் கன்டன்சர் மூலமாக மோட்டாரை இயக்கியதாக கூறப்படுகிறது. இதனை கடையநல்லூர் மின்வாரிய அலுவலகத்தில் லைன்மேனாக பணிபுரிந்து வந்த பாவூர்சத்திரம் அருகே உள்ள குலசேகரப்பட்டியை சேர்ந்த விஜய் ( 39 வயது) என்பவர் தனது செல்போனில் புகைப்படம் எடுத்துக் கொண்டாராம். இந்த புகைப்படத்தை வைத்து மின்சார வாரிய பறக்கும் படைக்கு புகைப்படத்தை அனுப்பினால் ரூ. 1.5 லட்சம் அபராதம் விதிப்பார்கள்.
ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கேட்ட மின்வாரிய லைன்மேன்
எனவே, தனக்கு ரூ. 25 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மின்சார வாரிய பறக்கும் படைக்கு தெரியப்படுத்த மாட்டேன் என்று முருகேசனிடம், லைன் மேன் விஜய் மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதை கேட்ட முருகேசன் அதிர்ச்சி அடைந்ததுடன், தன்னால் அவ்வளவு பணம் தர முடியாது என்று தெரிவித்துள்ளார். மேலும், அண்மையில் காட்டு யானைகள் தனது தென்னை தோப்புக்குள் நுழைந்து தென்னை மரங்களை சேதப்படுத்தி விட்டதால் தற்போது பணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதல் வசூல்.. ஒரே நாளில் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் அதிரடி!




லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்தில் புகார்
இருந்தாலும், கடந்த ஆகஸ்ட் 28- ஆம் தேதி லைன்மேன் செல்போன் மூலமாக விஜயை தொடர்பு கொண்டு லஞ்சம் கொடுக்குமாறு வற்புறுத்தி உள்ளார். அப்போது, ரூ. 25 ஆயிரத்தில் இருந்து ரூ. 5 ஆயிரமாவது தர வேண்டும் என்றும், இல்லையெனில் பறக்கும் படைக்கு தெரிவித்து விடுவதாக மீண்டும் மிரட்டி உள்ளார். இவ்வாறாக தொடர்ந்து வற்புறுத்தி வந்த நிலையில் லஞ்சம் கொடுக்க விரும்பாத விஜய், இது தொடர்பாக தென்காசி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
லைன்மேனை பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்பு போலீஸ்
அந்த புகாரின் பேரில், போலீசார் ரசாயன பொடி தடவப்பட்ட ரூ. 5 ஆயிரம் பணத்தை லைன் மேன் விஜய்யிடம் கொடுக்குமாறு போலீசார் அறிவுறுத்தி அனுப்பி வைத்தனர். அதன் அடிப்படையில், லைன் மேன் விஜய்யிடம், லஞ்ச பணத்தை முருகேசன் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பாலசுதர் தலைமையிலான போலீசார் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை கொண்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: பிறப்புறுப்பில் மிளகாய் பொடி, பபுள்கம்.. 8ஆம் வகுப்பு மாணவருக்கு சக மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்.. 9 பேர் கைது..