AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

பிறப்புறுப்பில் மிளகாய் பொடி, பபுள்கம்.. 8ஆம் வகுப்பு மாணவருக்கு சக மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்.. 9 பேர் கைது..

Tuticorin Crime: பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவனை கடந்த ஓராண்டாக 9 சக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 9 மாணவர்களையும் கைது செய்தனர்.

பிறப்புறுப்பில் மிளகாய் பொடி, பபுள்கம்.. 8ஆம் வகுப்பு மாணவருக்கு சக மாணவர்கள் பாலியல் துன்புறுத்தல்.. 9 பேர் கைது..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 03 Sep 2026 10:58 AM IST

செப்டம்பர் 3, 2026: தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டாரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனை சக மாணவர்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக 9 மாணவர்கள் கைது செய்யப்பட்டு, சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். விளாத்திகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

பாலியல் ரீதியாக மாணவனை துன்புறுத்திய சக மாணவர்கள்:

இப்பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் மாணவனை, சக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவனை அச்சுறுத்தி, நடந்த சம்பவங்களை யாரிடமும் தெரிவிக்கக் கூடாது என மிரட்டியதாகவும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவன், நடந்த சம்பவங்களை யாரிடமும் தெரிவிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து துன்புறுத்தலுக்கு ஆளானதால் மாணவனுக்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க்க: கிருஷ்ண ஜெயந்தி, வீக் எண்ட் ஊருக்கு போற பிளான் இருக்கா? தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

இதையடுத்து, ஆசிரியர் ஒருவர் மாணவனின் பெற்றோரை அழைத்து தகவல் தெரிவித்துள்ளார். பெற்றோர் மாணவனிடம் விசாரித்தபோது, தனக்கு நேர்ந்த சம்பவங்களை அவர் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பெற்றோர் பள்ளித் தலைமையாசிரியரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

9 மாணவர்கள் கைது:

பின்னர் பெற்றோர் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து, ஆய்வாளர் மங்கையர்க்கரசி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், மாணவனை கடந்த ஓராண்டாக 9 சக மாணவர்கள் தொடர்ந்து துன்புறுத்தி வந்ததாக தெரியவந்தது.

இதையடுத்து, போக்சோ சட்டம் மற்றும் பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து, 9 மாணவர்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் தூத்துக்குடியில் உள்ள சிறார் நீதி குழுமத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள சிறார் கூர்நோக்கு இல்லத்தில் அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் படிக்க: விலையேற்றத்திற்கு செக்!.. ரேஷன் கடைகளில் மலிவு விலையில் வெங்காய விற்பனை தொடக்கம்..

இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் சார்பிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் பள்ளியில் மீண்டும் நடைபெறாமல் தடுக்கும் வகையில், குழந்தைகள் நலக் குழு மூலம் மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Follow Us