கிருஷ்ண ஜெயந்தி, வீக் எண்ட் ஊருக்கு போற பிளான் இருக்கா? தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
Special Buses: தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி 910 பேருந்துகளும், செப்டம்பர் 4ஆம் தேதி 740 பேருந்துகளும், செப்டம்பர் 5ஆம் தேதி 880 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
செப்டம்பர் 3, 2026: கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3ஆம் தேதி வியாழக்கிழமை முதல் செப்டம்பர் 6ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை கிருஷ்ண ஜெயந்தி மற்றும் வார விடுமுறை நாட்கள் வருவதால், சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்கும், பிற மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் கூடுதலான பயணிகள் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்:
இதனை கருத்தில் கொண்டு, தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி 910 பேருந்துகளும், செப்டம்பர் 4ஆம் தேதி 740 பேருந்துகளும், செப்டம்பர் 5ஆம் தேதி 880 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு செப்டம்பர் 3ஆம் தேதி 210 பேருந்துகளும், செப்டம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் தலா 115 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: டாஸ்மாக் கடைகளில் ரூ.10 கூடுதல் வசூல்.. ஒரே நாளில் 67 ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் அதிரடி!
மேலும், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து செப்டம்பர் 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், வேலூர், ஓசூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு தினமும் 95 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
விடுமுறை முடிந்து சென்னை திரும்ப 805 சிறப்பு பேருந்துகள்:
ஞாயிற்றுக்கிழமை சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்பும் பயணிகளின் வசதிக்காக, செப்டம்பர் 6ஆம் தேதி அனைத்து முக்கிய இடங்களிலிருந்தும் பயணிகளின் தேவைக்கேற்ப 805 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் படிக்க: சரிவை நோக்கி தமிழ்நாட்டின் GST வருவாய்.. ரூ.140 கோடி குறைந்து பின்னடைவு.. என்ன செய்யப்போகிறது அரசு?
இந்த வார இறுதி நாட்களில் வியாழக்கிழமை 14,016 பேரும், வெள்ளிக்கிழமை 8,688 பேரும், சனிக்கிழமை 6,459 பேரும், ஞாயிற்றுக்கிழமை 14,239 பேரும் பயணம் செய்ய முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், தொலைதூரப் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்க TNSTC இணையதளம் அல்லது TNSTC மொபைல் செயலி மூலம் முன்பதிவு செய்து பயணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
சிறப்பு பேருந்து இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளுமாறும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.