செப்-4-ல் 45 நிமிடம் யுபிஐ செயல்படாது.. எஸ்பிஐ வங்கி முக்கிய அறிவிப்பு!
SBI Important Announcement | பொதுமக்களின் தினசரி பண பரிவர்த்தனையில் யுபிஐ மிக முக்கியமானதாக உள்ளது. இந்த நிலையில், எஸ்பிஐ வங்கியின் யுபிஐ நாளை (செப்டம்பர் 04, 2026) செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அது ஏன், யுபிஐ சேவைக்கு பதிலாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.
தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான பொதுமக்கள் யுபிஐ (UPI – Unified Payment Interface) மூலம் தங்களது அன்றாட பண பரிவர்த்தனை தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்கின்றனர். நெட்வொர்க் சிக்கல் காரணமாக யுபிஐ மூலம் பணம் செலுத்த முடியாத சூழல் ஏற்பட்டால் பயனர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிவிடுவர். இந்த நிலையில் தான், செப்டம்பர் 04, 2026 அன்று எஸ்பிஐ (SBI – State Bank Of India) வங்கியின் யுபிஐ 45 நிமிடங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதற்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
செப்டம்பர் 4-ல் 45 நிமிடங்கள் எஸ்பிஐ யுபிஐ செயல்படாது?
எஸ்பிஐ வங்கி நாளை (செப்டம்பர் 04, 2026) தனது யுபிஐ சேவை 45 நிமிடங்கள் செயல்படாது என அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக இரவு 12.15 மணி முதல் 1 மணி வரை என மொத்தம் 45 நிமிடங்கள் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு நேரம் என்பதால், இந்த நேரத்தில் பொதுமக்கள் பெரும்பாலும் யுபிஐ பண பரிவர்த்தனை மேற்கொள்ள மாட்டார்கள். அப்படியே பண பரிவர்த்தனை மேற்கொள்ள வேண்டும் என்றாலும், அதற்கான மாற்று ஏற்பாடுகள் தயாராக உள்ளதாக எஸ்பிஐ கூறியுள்ளது.




இதையும் படிங்க : சரிவை நோக்கி தமிழ்நாட்டின் GST வருவாய்.. ரூ.140 கோடி குறைந்து பின்னடைவு.. என்ன செய்யப்போகிறது அரசு?
யுபிஐ லைட் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் – எஸ்பிஐ
Due to scheduled maintenance activity, SBI UPI services will be temporarily unavailable from 00:15 hrs to 01:00 hrs on 04.09.2026 (IST). The activity may, however, be completed early. Customers may continue to use UPI Lite Services for uninterrupted service. We regret the…
— State Bank of India (@TheOfficialSBI) September 2, 2026
இந்த 45 நிமிட நேரத்தில் யுபிஐ பயன்படுத்த முடியாத சூழலில், பயனர்கள் யுபிஐ லைட் சேவைகளை (UPI Lite Services) பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
யுபிஐ லைட் அம்சத்தின் அளவு எவ்வளவு?
யுபிஐ லைட் அம்சம் மூலம் குறைந்த அளவிலான தொகையை பின் உள்ளிடாமலே பரிவர்த்தனையை மேற்கொள்ளலாம். இந்த முறையை பின்பற்றி ரூ.5,000 வரை பண பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இந்த நிலையில் தான், யுபிஐ பயன்படுத்த முடியாத நிலையில், யுபிஐ லைட் அம்சத்தை பயன்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.