AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கிரெடிட் கார்டு கடனில் இருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும்?.. இவற்றை ஃபாலோ பண்ணுங்க!

Credit Card Loan Repayment | பலரும் கிரெடிட் கார்டு மூலம் கடன் பெற்று அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், நீண்ட நாட்களாக செலுத்த முடியாமல் இருந்த கிரெடிட் கடனை திருப்பி செலுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு கடனில் இருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும்?.. இவற்றை ஃபாலோ பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 01 Sep 2026 18:44 PM IST

பணவீக்கம், விலை வாசி உயர்வு என பல்வேறு சிக்கல்கள் உள்ள நிலையில், பெரும்பாலானவர்களுக்கு ஊதிய உயர்வு இல்லாமலே உள்ளது. இதன் காரணமாக அவர்கள் ஒவ்வொரு மாதமும் தங்களுக்கு ஏற்படும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள கிரெடிட் கார்டு (Credit Card) பயன்படுத்துகின்றனர். சிலர் கிரெடிட் கார்டில் செலவு செய்யும் பணத்தை முறையாக திருப்பி செலுத்தி எந்தவித சிக்கலும் இல்லாமல் பராமரிக்கின்றனர். ஆனால், சிலரோ கிரெடிட் கார்டில் இருந்து செலவு செய்த பணத்தை முறையாக திருப்பி செலுத்தாமல் சிக்கலில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில் தான், கிரெடிட் கார்டு கடனில் இருந்து வெளியே வர உதவும் சில முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு கடனில் இருந்து வெளியே வர என்ன செய்ய வேண்டும்?

சில விஷயங்களை தவறாமல் கடைபிடிக்கும் போது கிரெடிட் கார்டு கடனில் சுலபமாக வெளியே வர முடியும்.

ரிமைண்ட் ஆப்ஷன்

தவணை தேதியை மறந்துவிட்டு, உரிய நேரத்தில் மாத தவணையை செலுத்தாமல் விடுவதன் மூலம் வட்டி மீது வட்டி ஏறி அதிக கடனாகிறது. இதனை தடுக்க மாத தவணை தேதியை ரிமைண்ட் செய்ய ரிமைண்டர் செட் செய்துக்கொள்ளலாம். இதன் மூலம் எந்த ஒரு மாதமும் மாத தவணை தேதியை தவற விடாமல் மாத தவணை செலுத்த முடியும்.

இதையும் படிங்க : இந்தியாவின் 7.8% வளர்ச்சியால் பிரதமர் மோடி மகிழ்ச்சி.. சாதனை சாத்தியமானது எப்படி?

ஸ்நோபால் முறை

கிரெடிட் கார்டு கடனுடன் சேர்த்து உங்களுக்கு வேறு ஏதேனும் சிறிய சிறிய கடன்கள் இருந்தால் அவற்றை அடைக்க முயற்சி செய்யுங்கள். காரணம் ஒன்றுக்கும் மேற்பட்ட கடன்களை வைத்திருப்பது சுமையை அதிகரிக்கும். எனவே, குறைவாக தொகை கொண்ட கடனை முன்கூட்டியே அடைப்பது மிகவும் உதவியாக இருக்கும்.

இதையும் படிங்க : மாதத்தின் முதல் நாள்.. சென்னையில் சிலிண்டர் விலை ரூ. 10.50 உயர்வு

பட்ஜெட் போடுங்கள்

ஒவ்வொரு மாதமும் சபளம் வந்த பிறகு முதல் வேலையாக பட்ஜெட் போடுங்கள். பட்ஜெட் போடுவதன் மூலம் தேவையான செலவு எது, தேவையில்லாத அல்லது தவிர்க்க கூடிய செலவுகள் எது என பிரித்து அதற்கு ஏற்ப பணத்தை செலவு செய்து மிச்சப்படுத்தி கடனை அடைக்க பயன்படுத்தலாம்.

பண பரிவர்த்தனைக்கு மாறுங்கள்

நீங்கள் வழக்கமாக கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, யுபிஐ ஆகியவற்றை பயன்படுத்தி பண பரிவர்த்தனை செய்யும் நபராக இருந்தால் அந்த முறையில் இருந்து கையில் பணம் வைத்து செலவு செய்யும் முறைக்கு மாறுங்கள். அது உங்களை தேவையற்ற செலவுகள் செய்வதில் இருந்து காப்பாற்றும்.

Follow Us