AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ஐடி வேலையை உதறிவிட்டு பழ தோட்டம் அமைத்த நபர்.. ஆண்டுக்கு ரூ.60 கோடி வருமானம்.. சேத்தன் சாதித்தது எப்படி?

Man Quit IT Job To Become Farmer In Karnataka | கர்நாடகாவை சேர்ந்தவர் சேத்தன். இவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அதனை ராஜினாமா செய்துவிட்டு பழ தோட்டம் அமைத்து சுமார் ரூ.60 கோடி ஆண்டு வருமானம் ஈட்டுகிறார்.

ஐடி வேலையை உதறிவிட்டு பழ தோட்டம் அமைத்த நபர்.. ஆண்டுக்கு ரூ.60 கோடி வருமானம்.. சேத்தன் சாதித்தது எப்படி?
சேத்தன்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 31 Aug 2026 23:39 PM IST

ஐடி துறையில் வேலை செய்தால் கை நிறைய வருமானம் கிடைக்கும், நல்ல வாழ்க்கையை வாழலாம் என்பது தான் பலரின் கருத்தாக உள்ளதோ. ஆனால், ஐடி துறையில் பணியாற்றும் நபர்களுக்கோ வேறு ஏதேனும் நிம்மதியான துறையில் பணியாற்ற வேண்டும் அல்லது சொந்தமாக தொழில் செய்ய வேண்டும் என்பதுதான் ஆசையாக உள்ளது. ஆனால், பொருளாதார சூழல் உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு பலரும் ஐடி வேலையை விட்டு வருவதில்லை. ஆனால், பெங்களூரை சேர்ந்த நபர் ஒருவர் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், அந்த வேலையை உதறிவிட்டு தனது குடும்னத்தின் 11 ஏக்கர் நிலத்தை விவசாயத்திற்காக பயன்படுத்தி கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார். யார் அந்த நபர், அவர் கோடிகளில் வருமானம் ஈட்ட என்ன செய்தார் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஐடி வேலையை  ராஜினாமா செய்துவிட்டு விவசாயத்தில் இறங்கிய சேத்தன்

பெங்களூரில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் சுமார் 8 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் தான் சேத்தன். இவர் 2017 ஆம் ஆண்டு தனது வேலையை ராஜினாமா செய்தார். அதன் பின்னர் பெங்களூரில் இருந்து தனது சொந்த ஊரான தட்சின கண்ணடா மாவட்டத்தில் உள்ள பெல்லாரேக்கு திரும்பினார். இவர் விவசாய பின்னணியை கொண்டு இருந்தார். அவரது குடும்பம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்த நிலையில், தானும் விவசாயம் செய்ய வேண்டும் என அவர் ஆசைப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க : வீட்டு கடனை திருப்பி செலுத்திய பிறகு இந்த ஆவணங்களை வாங்க மறக்காதீர்கள்.. என்ன என்ன தெரியுமா?

கடும் எதிர்ப்புகளுக்கு மத்தில் சாதித்து காட்டிய சேத்தன்

சேத்தனின் இந்த முடிவுக்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் என யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை. மீண்டும் ஐடி வேலைக்கே சென்றுவிட கோரி அவர்கள் அவரிடம் கூறியுள்ளனர். ஆனால், முயற்சியை அவர் கைவிடவில்லை. விவசாயிகள் காலம் காலமாக கையாண்ட எந்த முறையையும் அவர் பயன்படுத்தவில்லை. முழுவதுமாக நவீன முறையில் விவசாயம் மேற்கொள்ள முடிவு செய்தார். அவர் பல்வேறு ரக பழ மரங்களை தோட்டத்தில் வளர்க்க தொடங்கினார்.

ஆரம்பத்தில் சேத்தன் மிக கடுமையான சிக்கல்களை சந்தித்துள்ளார். ஆனால், அவர் தனது முயற்சியில் விடாமல் இருந்தார். அவர் டெல்லி, மும்பை, பூனே உள்ளிட்ட ஊர்களுக்கு பழங்களை அனுப்பி வைத்தார். இப்படி இடை விடாமல் அவர் உழைத்ததன் பலனாக தற்போது சுமார் ரூ.60 கோடி ஆண்டு வருமானம் ஈட்டி வருகிறார்.

Follow Us