Gold Price : ரூ.1,080 சரிந்த தங்கம் விலை.. ஒரு கிராம் எவ்வளவு.. இன்றைய விலை நிலவரம் இதோ!
Gold Price Reduced Silver Price Remain Same In Chennai Today | ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் தொடர் உயர்வை சந்தித்து வந்த தங்கம், இறுதியில் கடும் சரிவை சந்தித்து வருகிறது. அந்த வகையில், இன்று தங்கம் விலை உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை, ஆகஸ்ட் 31 : சென்னையில் தங்கம் விலை (Gold Price) நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் ரூ.15,000-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், மாதத்தின் முடிவில் படிப்படியாக சரிவை சந்தித்து மீண்டும் ரூ.15,000-க்கு கீழ் விற்பனையாகி வருகிறது. அந்த வகையில், இன்று (ஆகஸ்ட் 31, 2026) தங்கம் விலை மீண்டும் சரிவை சந்தித்துள்ளது. அதாவது, தங்கம் விலை கிராமுக்கு ரூ.135 குறைந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் (Silver Price) மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆகஸ்ட் மாதம் ஆரம்பத்தில் உயர்ந்து இறுதியில் குறையும் தங்கம்
2026 தங்கத்திற்கு சிறந்த ஆண்டாக அமையவில்லை. காரணம், மாதத்தின் தொடக்கத்தில் தொடர் உயர்வை சந்தித்து வந்த தங்கம், மாத கடைசியில் தொடர் சரிவை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக ஆகஸ்ட் 26, 2026 அன்று ஒரு கிராம் தங்கம் ரூ.15,010-க்கும், ஒரு சவரன் ரூ.1,20,080-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில், அதன் பிறகு சரிவை சந்தித்த தங்கம் தற்போது மீண்டும் ரூ.15,000-க்கு கீழ் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : Aadhaar : ஆதாரில் எத்தனை முறை முகவரியை மாற்றம் செய்யலாம்?.. UIDAI கூறும் விதிகள் என்ன?
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை
சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.135 குறைந்து ஒரு கிராம் ரூ.14,370-க்கும், சவரனுக்கு ரூ.1,080 குறைந்து ஒரு சவரன் ரூ.1,14,960-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.15,676-க்கும், ஒரு சவரன் ரூ.1,25,408-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.260-க்கும், ஒரு சவரன் ரூ.2,60,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.