Aadhaar : ஆதாரில் எத்தனை முறை முகவரியை மாற்றம் செய்யலாம்?.. UIDAI கூறும் விதிகள் என்ன?
Aadhaar Address Change Rules In UIDAI | ஆதாரில் உள்ள விவரங்களை மாற்றம் செய்யவும், அப்டேட் செய்யவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அனுமதி வழங்குகிறது. இந்த நிலையில், ஆதாரில் எத்தனை முறை முகவரியை மாற்றம் செய்யலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
இந்திய குடிமக்களுக்கான மிக முக்கிய ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி, மொபைல் எண் அனைத்தும் துல்லியமாக இருக்க வேண்டும். இந்த தகவல்களில் ஏதேனும் தவறு அல்லது முரண்பாடு இருந்தால் பல சேவைகளை பெற முடியாமல் போய்விடும். இந்த நிலையில் தான், ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி உள்ளிட்ட தகவல்களை அப்டேட் செய்யவும் மாற்றம் செய்யவும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI – Unique Identification Authority Of India) அனுமதி வழங்குகிறது. இந்த நிலையில், ஆதார் கார்டில் முகவரியை எத்தனை முறை மாற்றம் செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஆதாரில் எத்தனை முறை முகவரியை மாற்றம் செய்யலாம்?
வாடகைக்கு வீடு இருக்கும் நபர்களுக்கு அவ்வப்போது தங்களது வீட்டு முகவரியை மாற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இதற்காக தான் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் முகவரியை மாற்றம் செய்துக்கொள்ள அனுமதி வழங்குகிறது. பலரும் அடிக்கடி தங்களது வீட்டு முகவரியை மாற்றிக்கொண்டே இருப்பர். இந்த நிலையில், எத்தனை முறை வீட்டு முகவரியை மாற்றலாம் என தெரிந்துக்கொள்வது அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க : இன்னும் 3 நாட்களே உள்ளன.. கேஸ் சிலிண்டர் கேஒய்சி முடிக்கவில்லை என்றால் சிக்கல்!




எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம்
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் விதிகளின்படி, குடிமக்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் தங்களது ஆதார் கார்டில் முகவரியை மாற்றம் செய்துக்கொள்ள அனுமதி உண்டு. அடிக்கடி வீடு மாறும் நபர்கள், கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களால் இடம்பெயரும் நபர்களுக்கு இந்த சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது.
இதையும் படிங்க : Gold Price : செப்டம்பர் மாதம் தங்கம் விலை எப்படி இருக்கும்?.. நிபுணர்கள் கூறுவது என்ன?
ஆன்லைனில் முகவரியை மாற்றுவது எப்படி?
- முதலில் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் அதிகாரப்பூர்வ UIDAI தளத்திற்கு செல்ல வேண்டும்.
- அதில் உள்ள MyAadhaar போர்ட்டலுக்கு சென்று Log In செய்ய வேண்டும்.
- அதில் உள்ள Address Update என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, Proceed To Update Aadhaar என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வெண்டும்.
- பிறகு உங்கள் புதிய முகவரி விவரங்களை உள்ளிட்டு, அதற்கான சரியான முகவரி சான்றுகளை பதிவேற்றம் செய்ய வேண்டும்.
- அதற்கான கட்டணத்தை செலுத்தி, கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
மேலே குறிப்பிட்டுள்ள முறைப்படி உங்கள் முகவரியை நீங்கள் அப்டேய் செய்யும் பட்சத்தில், உங்களுக்கு URN (Update Request Number) கிடைக்கும். அந்த எண் மூலம் உங்கள் கோரிக்கையின் நிலை என்ன என்பது குறித்து நீங்கள் சுலபமாக தெரிந்துக்கொள்ளலாம்.