AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

செப்டம்பர் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?

Changes From September 1, 2026 | ஒவ்வொரு மாதமும் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரும். அந்த வகையில், செப்டம்பர் 01, 2026 முதல் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. இந்த நிலையில், அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்.. என்ன என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 28 Aug 2026 12:02 PM IST

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) விலை, பெட்ரோல் மற்றும் டீசல் (Petrol and Diesel) விலை, ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card) விதிகள் ஆகியவற்றில் சில முக்கிய மாற்றங்கள் ஏற்படும். ஆகஸ்ட் மாதம் நிறைவடைய இன்னும் ஒருசில நாட்களே உள்ளன. இந்த நிலையில், விரைவில் செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளதால் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. அவை என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

செப்டம்பர் மாதம் அமலுக்கு வர உள்ள முக்கிய மாற்றங்கள்

2026, செப்டம்பர் மாதம் கேஸ் சிலிண்டர், ஆதார் கார்டு உள்ளிட்டவற்றில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

கேஸ் சிலிண்டர் விலை

ஒவ்வொரு மாத தொடக்கத்திலும் எண்ணெய் நிறுவனங்கள் விலையில் மாற்றம் செய்யும். இதன் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் ஏற்படும். அந்த வகையில், செப்டம்பர் மாதமும் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : Gold Price : தங்கம் விலை திடீர் டிவிஸ்ட்.. 2 நாட்களாக தொடர் சரிவு.. காரணம் என்ன?

ஆதார் கார்டு

இந்தியாவில் குழந்தைகளுக்கு பால் ஆதார் கார்டு வழங்கப்படுகிறது. அந்த ஆதார் கார்டில் பெரியவர்களின் ஆதார் கார்டில் உள்ளதை போல கருவிழி படலம், கைரேகை ஆகியவை இருக்காது. அதனை பெற்றோர் குழந்தைக்கு 5 வயது நிறைவடைவதற்கு முன்னதாக அப்டேட் செய்ய வேண்டும். இந்த நிலையில் தான் 5 முதல் 17 வயது உடைய சிறுவர்களின் பயோமெட்ரிக் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்ய செப்டம்பர் 30, 2026 வரை அரசு கால அவகாசம் வழங்கியுள்ளது.

நிலையான வைப்பு  நிதி

நிலையான வைப்பு நிதி திட்டம் தொடர்பான விதிகளில் மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. வங்கிகள் இது தொடர்பான விதிகளை மாற்றி அமைக்கும் கட்டாயத்தில் உள்ளன. இந்த புதிய விதிகளின்படி ரூ.3 கோடி அல்லது அதற்கும் மேற்பட்ட வைப்பு தொகைகளுக்கான வட்டி விகிதங்களை வங்கிகள் ஒவ்வொரு பணி நாளும் காலை 10:10 மணிக்குள் தங்களது இணையதளத்தில் அப்டேட் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க : Aadhaar : இன்னும் ஒரு மாதம் தான் உள்ளது.. பெற்றோர்களே உங்கள் பிள்ளைகளின் பயோமெட்ரிக் விவரங்களை அப்டேட் செய்துவிட்டீர்களா?

கேஸ் சிலிண்டர் முன்பதிவு

எல்பிஜி கேஸ் சிலிண்டர் முன்பதிவில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் சமையல் எரிவாயு பயன்படுத்தும் வீடுகளுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. அதாவது, ஆகஸ்ட் 23, 2026-க்குள் இகேஒய்சி முடிக்காதவர்கள் ஆகஸ்ட் 31, 2026-க்குள் முடிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது, செப்டம்பர் மாதம் முதல் கேஸ் சிலிண்டர் கேஒய்சி மேற்கொள்ள முடியாது என்பதாகும்.

Follow Us