AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

Gold Price : இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

Gold Price Reduced For The Second Day In Chennai | சென்னையில் இன்று தொடர்ந்து இரண்டாவது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

Gold Price : இரண்டாவது நாளாக சரிந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 27 Aug 2026 10:32 AM IST

சென்னை, ஆகஸ்ட் 27 : சென்னையில் நாளுக்கு நாள் தங்கம் விலை (Gold Price) ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தொடர் விலை உயர்வை சந்தித்த தங்கம், இன்று (ஆகஸ்ட் 27, 2026) இரண்டாவது நாளாக தொடர் சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தங்கம் விலை ஒரு கிராம் மீண்டும் ரூ.15,000-க்கு கீழ் வந்துள்ளது. இந்த நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

தொடர் உயர்வுக்கு பிறகு தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை

2026 மார்ச் மாதம் முதல் தங்கம் விலை பெரிய அளவிலான மாற்றம் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஆண்டு இறுதியில் தங்கம் விலை உயரும் என்ற கணிப்புகளின்படி ஆகஸ்ட் மாதத்தில் தங்கம் விலை அதிரடி விலை உயர்வை சந்தித்தது. அதாவது, ஜூலை மாதத்தில் ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிராம் 22 காரட் தங்கம், ஆகஸ்ட் மாதாத்தில் ரூ.15,000-த்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டது.

இதையும் படிங்க : Gold Price : ஆகஸ்ட் இறுதிக்குள் ரூ.1.25 லட்சத்தை எட்டும் தங்கம் விலை?.. ஷாக் கொடுக்கும் கணிப்புகள்!

தங்கம் இத்தகைய கடும் விலை உயர்வை சந்தித்தது நகை பிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், கடந்த இரண்டு நாட்களாக தொடர் சரிவை சந்தித்து தங்கம் மீண்டும் ரூ.15,000-க்கு கீழ் வந்துள்ளது.

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் இன்று 22 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் ரூ.14,940-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் ரூ.1,19,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இது தற்போதைய செய்தி, மேலும் சில தகவல்கள் அப்டேட் செய்யப்படுகின்றன.

Follow Us